சென்னையில் கிருஷ்ணா நதி நீர் வினியோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் சனிக்கிழமை முதல் கிருஷ்ணா நீர் விநியோகிக்கப்படுகிறது.

சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களான புழலேரி, பூண்டி ஏரி மற்றும் செங்குன்றம் ஏரிகள் நீரின்றி வற்றி விட்டன. செங்குன்றம் ஏரியில் இருந்த மிகக்குறைந்த நீரை வைத்து சென்னை நகர மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

மழை இல்லாததால், சென்னை நகரில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு சென்னைக்குக் கிருஷ்ணா நீரைத் திறந்து விடும்படி ஆந்திர அரசிடம்தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இக் கோரிக்கையை ஏற்று, கண்டலேறு அணையிலிருந்து 400 கன அடி நீரை ஆந்திர அரசு திறந்துவிட்டது. 152 கிலோமீட்டர் கால்வாய் வழியாக வந்தஇந்த நீர் கடந்த புதன்கிழமை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைந்தது.

இந்த நீர் வியாழக்கிழமை பூண்டி ஏரிக்கு வந்தது. இந்த ஏரியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தண்ணீர் புழல் ஏரிக்குத் திறந்துவிடப்பட்டது.

சென்னை மண்டலப் பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியன், சென்னை குடிநீர் வழங்கு வாரிய தலைமைப் பொறியாளர் சூரியநாராயண சிங்ஆகியோர் முன்னிலையில் பூண்டி ஏரியிலிருந்து பேபி கால்வாய் வழியாக விநாடிக்கு 90 கன நீர் திறந்துவிடப்பட்டது.

பேபி கால்வாயில் திறந்துவிடப்பட்ட நீர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புழல் ஏரியை வந்தடைந்தது. இந்த ஏரியில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

அங்கு தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னை நகர மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சனிக்கிழமை காலை முதல் சென்னை நகர மக்களுக்கு கிருஷ்ணாநீர் விநியோக்கக்படுவதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த மூன்று மாதத்துக்கு கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+