வீரப்பன் நிபந்தனைக்கு பணியக் கூடாது - ஹைகோர்ட் நீதிபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காட்டில் இருக்கும் தனி மனிதனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுவிப்பது தீவிரவாதத்திற்கு தூண்டுகோலாகும் எனசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் குறிப்பிட்டார்.

சென்னை பெரம்பூரில் அன்னதான சமாஜன் கடந்த 63 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்காக அரிய தொண்டுகளை செய்து வருகிறது.

இதன் சார்பில் பயனீர் மழலையர் தொடக்கப்பள்ளி புதிய கட்டடத் திறப்பு விழா நடந்தது. பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதிஜெகதீசன், குறை கூறுவதால் மட்டும் குழந்தைகளின் தவற்றை திருத்த முடியாது, ஏனெனில் தவறு எந்த ரூபத்தில் குழந்தைகளை பாதிக்கிறது என ஆராயவேண்டும்.

ஆசிரியர்கள் பெற்றோர்கள் சமுதாயத்தின் இரு தூண்களைப் போன்றவர்கள். இதில் எந்தப் பக்கம் தவறு நடந்தாலும், அது சமுதாயத்திற்கு பாதிப்பைஏற்படுத்தும்.

சமீபத்தில் பத்திரிக்கை படம் ஒன்றில் பஸ்சின் கூரை மீது மாணவர்கள் ஏறி பயணம் செய்வதைக் கண்டேன். இந்தப் படத்தைக் கண்டவுடன் அந்த மாணவர்களின்பெற்றோர்கள் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதைக்கண்டு கொள்ளவில்லை. இதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள்நடத்திய போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்ட னர்.

மாணவர்கள் வன் முறையால் பெரிதும் பொருட் சேதமும் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், சில்அரசியல் குறுக்கீடு காரணமாக தண்டிக்கப்பட்ட மாணவர்கள் வெளியே வந்துவிட்டனர்.

குற்றம் செய்த எவரையும் தண்டிக்காவிட்டால் சமுதாயம் சீர் கெடும். இதைப்போல் காட்டிலிருக்கும் தனிமனிதனின் கட்டளைக்குப் பணிந்து பெரும்பாலானதண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் எந்தவொரு நிபந்தனையுமின்றி வெளியே வருவிருப்பது தீவிரவாதத்தின் அச்சாணி.

இந்தச் சூழ்நிலை மீதுதான் பயங்கரவாதம் என்ற ஆணிவேர் முளைத்து சமுதாயம் என்னும் தேன் கூட்டை சிதறடிக்கச் செய்யும். குற்றம் வளரும் போதேதண்டிக்கப்பட்டு விட வேண்டும். அதை விட்டு குற்றத்திற்கு ஒத்துப் போனால் சமுதாய ஒற்றுமை குலைந்து விடும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+