நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் முடிந்தது
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்திற்கு அக்டோபர் 10-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில்போட்டியிட இதுவரை 20 அரசியல் கட்சிகள், 10 சுயேச்சை குழுக்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளன.
திங்கள்கிழமை பிற்பகலுக்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். பிற்பகல்வரைதான் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு காலக்கெடுவாகும்.
தேர்தலில் போட்டியிட விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலையும் மீறி, கட்சிகளிடையேகடும் ஆர்வம் நிலவியது. அதிபர் சந்திரிகாவின் இலங்கை சுதந்திராக் கட்சிதலைமயிலான ஆளும் மக்கள் கூட்டணி, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, இடது சாரிக் கூட்டணியான ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை மொத்தம் 22மாவட்டங்களில் போட்டியிடுகின்றன.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து அரசியல்கட்சிகளும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, அனைத்து தமிழர் கட்சிகளும் தேர்தல் களத்தில் நிற்கின்றன. டி.யூ.எல்.எப்,பிளாட், டெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்., ஏ.சி.டி.சி ஆகிய கட்சிகள்யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் தவிர, புதிய சிங்கள தீவிரவாதகட்சிகளான சிங்கள உருமாயா கட்சியும் களத்தில் நிற்கிறது.
பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே, கலுத்தரா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.எதிர்க்கட்சித் தலைவர் விக்கிரமசிங்கே, கொழும்பு மாவட்டத்திலிருந்து தேர்தலில்நிற்கிறார்.
முன்னாள் வட கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜ பெருமாள் தலைமையிலானசுயேச்சைக் குழு மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில்போட்டியிடுகிறது.
இலங்கை அரசியல் சட்டப்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் மாவட்ட வாரியாகவேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.தொகுதி வாரியாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது. மொத்தம் 22 தேர்தல் மாவட்டங்களில்இலங்கையில் உள்ளன.
225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 12.6 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கஉள்ளனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications