செக்ஸ் குற்றச்சாட்டு: 3 பாக். வீரர்களுக்கு அபராதம், தடை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஷாஹித் அஃபிரிதி,ஹசன் ராஸா, அட்டிக்-உஸ்-ஸமான் ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதமும்,கென்யாவில் நடைபெற உள்ள ஐ.சி.சி. நாக்அவுட் கிரிக்கெட் போட்டியில் விளையாடதடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் மூன்று நாடுகள் கலந்து கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்போட்டித் தொடர் நடந்தது. கடைசிப் போட்டி லாகூரில் நடைபெற்றது.

அப்போது தங்களது அறைக்கு வந்த சில பெண்களிடம் செக்ஸ் மோசடியில்ஈடுபட்டதாக மேற்கண்ட மூன்று வீரர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்துபாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விசாரணை நடத்தியது.

விசாரணை முடிந்து மூன்று பேருக்கும் ரூ. 50 ஆயிரம் அபராதமும், ஐ.சி.சி.நாக்-அவுட் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமைவெளியிட்டது.

இப் பிரச்சினையை பத்திரிக்கைகள் மிகைப்படுத்திவிட்டன. கிரிக்கெட் வீரர்களின்அறைகளுக்கு பெண் ரசிகைகள் சென்றனர் என்பது உண்மை. ஆனால், அவர்களிடம்கிரிக்கெட் வீரர்கள் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரம் ஏதும்இல்லை.

ஆகவே, வீரர்கள் மீதான குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாரியத்தலைவருக்கு கோரிக்கை விடப்பட்டது. ஆனால், கிரிக்கெட் வீரர் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும் தங்களது அறைக்கு ரசிகர்களை வரவிட்டது அவர்களதுதவறு என்றும் வாரியத் தலைவர் தாகிர் ஸியா கூறிவிட்டார்.

இதையடுத்து மூன்று வீரர்களுக்கும் அபராதமும், கிரிக்கெட் போட்டியில் விளையாடத்தடையும் விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணித்தேர்வில் மேற்கண்ட மூன்று வீரர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்படாது என்றுபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+