மதுரை தர்காவில் கொடுமைக்குள்ளாகும் மன நோயாளிகள்
மதுரை:
மதுரை கோரிப்பாளையத்தில் சுல்தான் அலாவுதீன் தர்காவில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வரும் மன நோயாளிகள் குறித்துவிசாரிக்க மனித உரிமைக் கமிஷன் சிறப்புக் குழுமை அமைத்துள்ளது.
இங்கு உள்ள இல்லத்தில் மனநோயாளிகளை இடைவெளியின்றி தூண்களிலும், கல்லிலும் கட்டிவைத்து இருப்பதாகவும்,மீறுபவர்களை அடித்து சித்ரவதை செய்யப்படுவலதாகவும் தேசிய மனித உரிமைக்குழுவுக்கு மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரிப்பேராசிரியர் ஒருவர் புகார் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனித உரிமைக் கமிஷன்உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தி மனித உரிமைக் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தர்காவில் ஆய்வு நடத்தியபொழுது ஆண்களும், பெண்களுமாக 79 பேர் இருந்தனர். அவர்களில் 39 பேர் மனநிலைபாதிக்கப்பட்டவர்கள். 29 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள்.
மனநிலை பாதிக்கப்பட்ட 12 பேரை கட்டிவைத்து கூரை வேயப்பட்ட கொட்டகையில் அடைத்து வைத்துள்ளனர். 10 பெண்களைகட்டி வைத்திருந்தனர்.
இந்த இல்லத்திற்கு அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த மனநோய் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறப்பு மகளிர்நோய் மருத்துவர்கள் அடங்கிய குழு சென்று 79 நிாேயாளிகளையும் பரிசோதித்தது. அவர்களில் 34 பேர் மன நோயால்பாதிக்கப்பட்டவர்கள். பிற நோயாளிகள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள்.
55 பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை என்று தெரியவந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தர்காவின் அமைப்பு, தங்கும் வசதி பற்றியும் விபரமாக விசாரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மனிதஉரிமை கமிஷனுக்கு விபரம் அனுப்பப்பட்டது.
மாவட்ட கலெக்டரின் அறிக்கை மூலம் உண்மையை அறிந்து கொண்ட மனித உரிமைக் கமிஷன், இந்தக் கொடுமைகள் குறித்துமேலும் ஆராய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications