வெளிநாட்டில் சொத்து கிடையாது .. கூறுகிறார் ஜெ.
சென்னை:
வெளிநாடுகளில் எந்தவிதமான சொத்தும் எனக்குக் கிடையாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்பிக் ஊழல் வழக்கு தொடர்பாக ஜெயலலிதா திங்கள்கிழமை தனி கோர்டில் ஆஜரானார். காலை 10.40 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்தவர் 10.55மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அதற்கு முன் நீதிமன்ற வாசலில் நிருபர்களை சந்தித்தார்.
ஜெயலலிதா கூறுகையில், சந்தன வீரப்பன் விவகாரத்தில் நான் கூறிய கருத்துக்களை உறுதிப் படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுஅமைந்துள்ளது. இந்தப் பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பும் நாக்கத்தோடு லண்டனில் நான் நட்சத்திர ஹோட்டல் வாங்கியுள்ளதாக என் மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளனர்.
என் மீது ஏற்கனவே முதலாவது தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த நீதிபதியின் அனுமதியின் பேரில் தான்மேற்கொண்டு விசாரணைக்கு லண்டன் சென்றனர்.
சட்டப்படி வெளிநாட்டு விசாரணை முடிந்தவுடன் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வரும் முதலாவது தனி நீதிமன்றத்தில் தான் கூடுதலாக குற்றப்பத்திரிகைதாக்கல் செய்யவேண்டும். ஆனால் இவர்கள் அப்படி செய்யாமல் என் மீது தனி வழக்காக அதை தொடர்ந்துள்ளனர். இப்படி செய்துள்ளது சட்டத்துக்குமுரணானது. எதிரானது. சட்டப்படி செல்லாது.
எனக்கு எந்த வெளிநாட்டிலும் எந்தவிதமான சொத்தும் கிடையாது. இப்பொழுது என் மீது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த வழக்கு, மற்றும் ஒருபொய் வழக்காகும். தனியாக இப்படி போட்டிருப்பது சட்டப்படி தவறு ஆகும் என்று ஜெயலலிதா கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications