15-ம் தேதிக்குள் ராஜிநாமாவா ... சே..சே என்கிறார் ஜோதிபாசு
கல்கத்தா:
மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து செப்டம்பர் 15-ம் தேதி தாம் ஓய்வு பெறுவதாக இன்டர்நெட்டில் வெளியான செய்தியை ஜோதி பாசு மறுத்துள்ளார்.
87 வயதான ஜோதிபாசு, உடல் நிலை காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெற விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்தார். ஆனால்,எப்போது ஓய்வுபெற உள்ளார் என்பதை அவர் அறிவிக்கவில்லை.
இந் நிலையில், இன்டர்நெட் தளம் ஒன்று செப்டம்பர் 15-ம் தேதி ஜோதி பாசு ஓய்வு பெற உள்ளார் என்று செய்தி வெளியிட்டது. இதை ஜோதி பாசுமறுத்துள்ளார்.
முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வது குறித்தோ, ஓய்வு பெறுவது குறித்தோ நான் எந்த இன்டர்நெட் செய்தித் தளத்துடனும் பேசவில்லை என்று அவர்தெரிவித்தார்.
எனக்கு எதிராக தூண்டிவிடப்படும் பிரசாரம் இது. அச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. நான் ஓய்வுபெற விரும்புவது உண்மைதான். கடந்த டிசம்பர்மாதம் முதலே நான் அதைக் கூறி வருகிறேன்.
ஆனால், நான் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி நான் முதல்வர் பதவியில் தொடரவேண்டும் என்று விரும்பியது. அதனால், முதல்வர் பதவியில் நான்தொடர்கிறேன்.
எத்தனையோ முறை இதை நான் தெரிவித்துவிட்டேன். நான் எப்போது ஓய்வு பெறுகிறேனோ அப்போது எல்லோருக்கும் தெரிவிப்பேன் என்றார்ஜோதிபாசு.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications