18-ம் தேதி புதிய கட்சி தொடங்கும் 8 மாஜி மந்திரிகள்
சென்னை:
தமிழகத்தில் அரசியல்கடசிகளின் எண்ணிக்கையில் வரும் 18ம் தேதி முதல் மேலும் ஒன்று சேர உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.டி சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், வி.வி.சாமிநாதன், ராஜாமுகமது, அருணாசலம்ஆகியோர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்,
வரும் 15-ம் தேதி புதுக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தோம். அது தள்ளி வைக்கப்படுகிறது. வரும் 18-ம் தேதிவிஜயசேஷமஹாலில் காலை 9 மணிக்கு எங்களது தொண்டர்களை கூட்டி புதுகட்சி பற்றி அறிவிக்க இருக்கிறோம்.
எங்கள் புதுக்கட்சியின் கொள்கைகள் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய மூன்று தலைவர்களும் நாட்டுக்கு வகுத்தளித்தகொள்கை கோட்பாட்டின்படி வகுக்கப்படும்.
எங்கள் கட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னுசாமி, குழந்தைவேலு ஆகியோரும் உள்ளனர். நாங்கள் எட்டு பேரும்நேர்மையான, நாணயமாக சாதி- மதம் பாராமல் அமைச்சராக பணியாற்றி தமிழக மக்களுக்கு தொண்டு செய்துள்ளோம்.
எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. நிர்வாகத்தில் திறமையாக பணி செய்து இருக்கிறோம். எங்கள் திறமைவீணாகக்கூடாது என்பதாலும், சாதி சங்கங்கள் மூலம் தமிழகம் பிரியக்கூடாது என்பதாலும் நல்ல ஆட்சியைஏற்படுத்துவதற்காகவும் புதிய கட்சி துவங்கப்படுகிறது.
கட்சியின் பெயர், கொடி ஆகிய விபரங்கள் விஜயசேஷமஹாலில் அறிவிக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள்போட்டியிடுவோம். த.மா.காவுடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றியெல்லாம் தேர்தல் சமயத்தில் தான்முடிவெடுப்போம். தேர்தலில் நல்லவர்களை நிறுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் அமைச்சர்கள் கூறினார்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன், தனது மக்கள் நலஉரிமைக்கழகத்தை புதிய கட்சியுடன் இணைக்கிறார் என்றும் அறிவித்தனர்அமைச்சர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications