இலங்கையில் கடும் சண்டை: 233 புலிகள், 101 ராணுவத்தினர் சாவு
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும்இடையே நடந்து வரும் கடும் சண்டையில் 344 பேர் இறந்தனர்.
இவர்களில் 101 பேர் இலங்கை ராணுவத்தினர், 233 பேர் விடுதலைப் புலிகள். இச்சண்டையில் 479 இலங்கை ராணுவத்தினர் காயமடைந்ததாக ராணுவச்செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகள்யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியில் மறைவிடங்களை ஏற்படுத்திக் கொண்டுராணுவத்தினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.
அக்டோபர் 10-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தாமல் தடுக்கும்பொருட்டு அவர்களதுமறைவிடங்கள் மீது இலங்கை ராணுவம் புதிய தாக்குதலை ஞாயிற்றுக்கிழமைதொடங்கியது.
யாழ்ப்பாணம் நகருக்கு அருகே கொழும்புத்துறை, சரசாலை, மட்டுவில், நுனவில்ஆகிய விடுதலைப் புலிகளின் 4 மறைவிடங்கள் மீது ராணுவம் கடுமையானதாக்குதலை நடத்தி வருகிறது.
புலிகளும் தங்களது மறைவிடங்களைக் காத்துக் கொள்ள கடுமையான பதில்தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து இதுவரை 344பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் 100 இலங்கைராணுவத்தினர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தங்களது சார்பில் 160 பேர் இறந்ததை ஒப்புக் கொண்ட விடுதலைப் புலிகள், 80-க்கும்அதிகமான சடலங்கள் இன்னும் போர்க்களத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே மீண்டும்கடுமையான போர் தொடங்கியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நகரைச் சுற்றியுள்ளபகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச்சென்றபடி உள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கையில் காயமடைந்த இலங்கைராணுவத்தினரை கொழும்பு மற்றும் வவுனியா மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லவிமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் இலங்கை ராணுவம்பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது.
இலங்கை ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதல் நடவடிக்கை அரசியல் ஆதாயம் பெறவேமேற்கொள்ளப்பட்டுள்ளது என்று முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிகுற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications