தேர்தலுக்குப் பின் சந்திரிகா பதவி தப்புமா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

Chandrikaஇலங்கை நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பெரும்அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க அக்டோபர் 10-ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் பல வகையில் முக்கியத்துவம்பெற்றுள்ளது. உலகின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

அதிபர் சந்திரிகாவின் இலங்கை சுதந்திரா கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணியும்,முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இன்னொருஅணியும் முக்கிய போட்டியில் உள்ளன. தமிழர் கட்சிகள் ஒரே அணியாகபோட்டியிடாமல் பிரிந்து களத்தில் உள்ளன.

இப்போது தேர்தல் முடிவுகள் குறித்து விவாதங்கள் துவங்கியுள்ளன. இத்தேர்தலில்பெரும்பான்மை பலம் பெற்றாக வேண்டிய நிலையில் அதிபர் சந்திரிகா உள்ளார்.இல்லாவிட்டால் அரசியல் சட்ட நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மொத்தமுள்ள 225 இடங்களில் பாதி இடங்களை எதிர்க்கட்சியினர் பிடித்து விட்டால்,அதிபர் சந்திரிகாவின் பதவிக்கு ஆபத்து ஏற்படும். இலங்கை சட்டப்படி, நாட்டின்தலைமைப் பொறுப்பில் அதிபர் இருப்பார். அவரிடம்தான் அனைத்து அதிகாரங்களும்இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பிரதமரை, அதிபர்தான்தேர்ந்தெடுப்பார்.

பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர், வெறும் அலங்கார பொம்மையாக மட்டுமேஇருப்பார். ஆட்சியை நடத்துவதும், அமைச்சர்களை நியமிப்பதும் அதிபரின்வேலையே.

நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் 6 ஆண்டுகள். இதில் முதல் ஆண்டை கடந்த பிறகு,அதன் பின் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம்அதிபருக்கு உண்டு.

அதே சமயத்தில், ஒரு ஆண்டுக்குப் பிறகு இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் அதிபர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு பதவி நீக்கம் செய்யநாடாளுமன்றத்திற்கும் அதிகாரம் உண்டு. இதனால் தேர்தலில் அதிபர் சந்திரிகாவின்கூட்டணி பெரும்பான்மை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1994-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் கூட்டணி 113 இடங்களில் வெற்றி பெற்றது.ஐக்கிய தேசியக் கட்சி 94 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர்காங்கிரஸ் கட்சியின் 7 இடங்களும் அடங்கும். இக்கட்சி, தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு, பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்து விட்டது.

இத்தேர்தலில் பெரும்பான்மை பெறுவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்ரனில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். செப்டம்பர் 4-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்இரண்டே மாதங்களில் அதிபர் சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்புவோம்.

அதிபரிடம் அதிகாரங்கள் குவிந்திருக்கும் நிலையை மாற்றுவோம். குறைந்தஅதிகாரங்கள் கொண்ட பதவியாக அதிபர் பதவியை மாற்றுவோம் என்றார்.

1994-ம் ஆண்டு தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 1995-ம்ஆண்டு ஜூலை 15-ம் தேதிக்குள், அதிபர் பதவியை ஒழித்து விடுவதாக சந்திரிகாஉறுதி கூறியிருந்தார். ஆனால் கடைசி வரை அதை நிறைவேற்றவில்லை. கடந்தஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரதுபதவிக்காலம் 2005-ம் ஆண்டு முடிகிறது.

யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது:

இதற்கிடையே, இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றுநடுநிலையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணியைவிட மக்கள் கூட்டணிக்கு ஓரளவு வாய்ப்பு இருந்தாலும் கூட இது மெஜாரிட்டி பெற்றுத்தர உதவாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

50 சதவீத இடங்களைக் கூட மக்கள் கூட்டணி பெறாது என்று கருத்துத் தெரிவிக்கும்அவர்கள், கடந்த முறை இக்கூட்டணிக்கு வாக்களித்த பலர் இப்போது அதிருப்தியில்இருப்பதால், மீண்டும் வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் அரசியல் சட்ட மசோதாவை நிறைவேற்றஅதிபர் சந்திரிகா அவசரப்பட்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.

இந்தத் தேர்தலில் சிங்கள உருமயா என்ற புதிய கட்சி களத்தில் உள்ளது. அரசியல்சட்டத் திருத்தத்தை எதிர்த்த புத்த மத அமைப்புகள் இணைந்து இந்தக் கட்சியைதோற்றுவித்துள்ளன. இந்தக் கட்சியும், ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியும் சேர்ந்து 10முதல் 20 இடங்களைக் கைப்பற்றும் என்று ஒரு பத்திரிக்கை ஆசிரியர் கருத்துத்தெரிவித்துள்ளார்.

இந்த இரு கட்சிகளும், தமிழர் கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 40 இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற்பட்டால் யார் ஆட்சியமைக்க முயன்றாலும்இவர்களிடம் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார் அந்த பத்திரிகை ஆசிரியர்.

நாடாளுமன்றத் தேர்தலில் 5000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.12 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் இந்தத் தேர்தல் தமிழர்களைப் பொருத்தவரை மிகவும்முக்கியமானது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு இந்தத்தேர்தலையடுத்து வரும் அரசின் மூலமாவது தீர்வு ஏற்படுமா என்பதே இலங்கைத்தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+