பாரீஸில் விநாயகர் சதுர்த்தி விழா - அடுத்த வாரம் ரத யாத்திரை

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

10 நாட்கள் நடைபெறும் இவ் விழாவின் இறுதி நாளான வரும் ஞாயிற்றுககிழமை ரதயாத்திரை நடைபெற உள்ளது. இந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள்கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரீஸில் லா செப்பெல்லே என்ற இடத்தில் விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தஆலயத்திலிருந்து புறப்படும் ரத யாத்திரை பாரீஸ் நகரின் முக்கிய பகுதிகள் வழியேசென்று மீண்டும் கோயிலை வந்த அடையும்.

1996-ம் ஆண்டு முதல் பாரீஸில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த விழாவில் ரத யாத்திரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பிரான்ஸ் தவிர, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் இந்த ரத யாத்திரையில்கலந்து கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ரத யாத்திரையில் கலந்து கொள்ளும்பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1998-ம் ஆண்டு நடந்த ரத யாத்திரையில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கொள்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+