நியமன எம்.பி.ஆகிறார் வரதராஜப் பெருமாள்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சியின் சார்பில் நியமன உறுப்பினராக வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்வரதராஜப் பெருமாள் நியமிக்கப்பட உள்ளார்.
இத் தகவலை மக்கள் கூட்டணிக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 1998-ம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுஅம் மாகாண முதல்வராகப் பதவியேற்றார் வரதராஜப் பெருமாள்.
1990-ம் ஆண்டு தான் ஆட்சி செலுத்தி வந்த வடகிழக்கு மாகாணத்தை சுதந்திரப் பகுதியாக தன்னிச்சையாக அறிவித்துவிட்டு இந்தியாவுக்குத்தப்பியோடியவர் வரதராஜப் பெருமாள்.
9 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தலைமறைவாக இருந்த அவர், இலங்கை நாடாளுமன்றத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி பொதுத் தேர்தல்நடைபெற உள்ளதை அடுத்து மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததை அடுத்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் இருந்து வரதராஜப் பெருமாள்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து சந்திரிகாவின் ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சி சார்பில் நியமன உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் கூட்டணிக் கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்களுக்கு 22 மாகாணங்களில் அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 29 அரசியல் கட்சிகளின்சார்பில் 5,430 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த 5,430 பேரில் வரதராஜப் பெருமாளும் சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications