பா.ம.கவின் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை:
பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையப் பிரச்சனை தொடர்பாக ஜெயில் நிரப்பும் போராட்டம் நடைபெறும் என பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெரம்பலுர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் ஜெயங்கொண்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரிமற்றும் அனல் மின் உற்பத்தி திட்டம் ஆகியவற்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஏறக்குறைய 4,017 ஹெக்டேர் நிலம்கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பழுப்பு நிலக்கரி கறுப்புத் தங்கம் என்று போற்றப்படுகிறது. ஒரு ஹெக்டேரில் ஏற்குறைய இருபது கோடிரூபாய் அளவுக்கு நிலக்கரி கிடைக்கும் என்றுகருதப்படுகிறது. இங்குள்ள நிலத்தை அதன் சொந்தக்காரர்களிடம் இருந்து பறித்து தனியாருக்கு கொடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிகிறது. இது கண்டனத்திற்குரியது.
ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாயாகும். ஆனால் அரசு ரூ. 22,000 தான் விலை நிர்ணயம் செய்துள்ளது. நிலத்தை குறைந்த விலையில்நிர்ணயம் செய்து தனியாரிடம் அரசு ஒப்படைக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.
அந்தப் பகுதி மக்கள் சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்வதைக் காட்டிலும், பிறந்த மண்ணில் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து போராட வேண்டும் என்றமனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சனையைச் சுமூகமாக தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை தலைவராகக் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், அரியலூர் -ஜெயம்கொண்டம் நிலம் கொடுப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் நிலம் வழங்கும் மக்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்.
அரசு அளவு கோலாகக் கொண்டுள்ள வழிகாட்டி மதிப்பீட்டை கைவிட வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு விலை நிர்ணயம்செய்யவேண்டும். நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் திட்டங்களுக்கு நிலம் வழங்குபவர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமைதரவேண்டும்.
மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவில்லை என்றால், என் தலைமையில் மக்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை சிறையை விட்டு வெளியே வராமல் தொடர்ந்து போராடுவோம் என்று அறிக்கையில் கூறியிருக்கிறார் டாக்டர்ராமதாஸ்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications