தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ்காரர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.இதில், ஒரு தலைமைக் காவலர் இறந்தார். 4 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர்.
ஸ்ரீநகர், கன்யார் பகுதியில் ஷிராஸ் என்ற சினிமா தியேட்டர் உள்ளது. 1990ம் ஆண்டில் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலையடுத்து அது மூடப்பட்டது. அந்தஇடத்தில், எல்லைப் பாதுகாப்புப் படையின் 49-வது பட்டாலியன் இயங்கி வந்தது. இப்பகுதியின் தலைமை அலுவலகமாகவும் அது இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்த அலுவலகம் மீது தீவிரவாதிகள் கிரனேட் வெடிகுண்டுகளை வீசித் தாக்கினர். இதில், 5 பேர்காயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தலைமைக் காவலர் தேவேந்திர சிங் இறந்தார்.
தாக்குதல் சம்பவத்தையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜமைத் உல் முகைதீன் அமைப்புத்தான் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும்என்று கருதப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications