வர்றீங்களா, இல்லையா?...இந்தியாவை கேட்கிறது பாகிஸ்தான்
துபாய்:
பாகிஸ்தானில் மேற்கொள்ளவுள்ள கிரிக்கெட் சுற்றுப்பயணம் குறித்து இந்த மாத இறுதிக்குள்உறுகியாகத் தெரிவிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்தை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர்-ஜனவரி மாதவாக்கில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய இந்திய கிரிக்கெட்அணி திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் சீரற்ற உறவு மற்றும் மேட்ச்பிக்ஸிங் புகார் உள்ளிட்ட பல காரணங்களுக்காக பாகிஸ்தானுடனான டொரன்டோ தொடருக்குஅனுமதி கொடுக்க மத்திய அரசு மறுத்து விட்டது.
தற்போது துபாயில் ஆசிய கிரிக்கெட் சங்க கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் இந்தியகிரிக்கெட் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெப்டினன்ட்ஜெனரல் தக்கீர் ஜியா, இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் சுமதிபாலா மற்றும் சர்வதேசகிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தின்போது, இந்திய அணியின் பாகிஸ்தான் தொடர் குறித்து விவாதிக்க பாகிஸ்தான் வாரியத்தலைவர் ஆர்வம் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று முத்தையா கூறுள்ளார். கல்ப்நியூஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், ஆசிய கிரிக்கெட் சங்க விவகாரம் குறித்துப் பேசவே இங்குவந்துள்ளேன். இந்திய அணியின் பாகிஸ்தான் தொடர் குறித்து வரவில்லை என்றார் முத்தையா.
முன்னதாக கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு ஜியா அளித்த பேட்டியில், முத்தையாவைச் சந்திக்க ஆர்வமாகஉள்ளேன். இந்திய அணியின் வருகை குறித்து விவாதிக்க விருப்பமாக உள்ளேன். தொடரில் இந்தியாகலந்து கொள்கிறதா, இல்லையா என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் தெரிவித்தால் நன்றாகஇருக்கும். அதை வைத்துத்தான் எங்களது அடுத்த கட்ட தொடர்கள் குறித்து முடிவு செய்ய முடியும்.
ஒருவேளை இந்தியா வராவிட்டால், வேறு ஏற்பாடுகள் குறித்தும் நாங்கள் யோசித்து வருகிறோம்.உலக லெவன் அணியை அழைத்து பாகிஸ்தானில் விளையாட வைக்கவும் யோசித்து வருகிறோம்.ஆனால் கண்டிப்பாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
இதற்கிடையே, நைரோபி செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் நீடிப்பாரா என்றகேள்விக்கு முத்தையா பதிலளிக்கையில், இதுகுறித்து கபில் தேவுடன் பேசுவேன். விரைவில் எனதுமுடிவைத் தெரிவிப்பேன். செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் துவங்கும் பயிற்சி முடிவுக்கு முன் கபில் தேவ்குறித்து முடிவு செய்யப்படும் என்றார் முத்தையா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications