ரஜினியும் பெங்களூர் வருகிறார்
சென்னை:
சத்தியமங்கலம் காட்டில் வீரப்பனைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பியுள்ள அரசுத் தூதர் கோபாலுடன், நடிகர்ரஜினிகாந்தும் புதன்கிழமை மாலை பெங்களூர் வருகிறார்.
இருவரும் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு அவர் பேசி கொடுத்தனுப்பியுள்ள கேஸட்களை கொடுப்பதற்காகபெங்களூர் வருகின்றனர்.
அந்த கேஸட்டுக்களில் வீரப்பன் பேசவில்லை. சும்மா நான் பேச அவங்க பேசன்னு என்னது இது, என்னோடஇரண்டு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றச் சொல்லுங்க பிறகு பார்ப்போம் என்று கோபாலிடம் கூறிவிட்டான்வீரப்பன்.
புதன்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த கோபால்செய்தியாளர்களிடம் கூறுகையில், வீரப்பனுடன் பேச்சுவார்த்தை இத்துடன் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தைதொடராது.
வீரப்பன் விதித்த 13 கோரிக்கைகளில் அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் பதிலை தெரிவித்து ஓரளவுசமாதானப்படுத்தி விட்டேன். அவனது இரண்டு கோரிக்கைகளில் மட்டும் மிகவும் கண்டிப்பாக இருக்கிறான்.அதாவது கர்நாடக சிறையில் உள்ள 121 தடா கைதிகளை விடுவிப்பது மற்றும் தமிழக சிறையில் உள்ள 5 தமிழ்தீவிரவாதிகளை விடுதலை செய்வது இந்த இரண்டு கோரிக்கைகளில் மிகவும் உறுதியாக இருக்கிறான்.
கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கே எங்கள் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. உச்சநீதிமன்றத்தில்இருந்து விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துத்தான் அங்கே காத்திருந்தேன் என்றார் கோபால்.
புதன்கிழமை மாலை பெங்களூருக்கு கிளம்புகிறார் கோபால். அவருடன் நடிகர் ரஜினிகாந்தும் பெங்களூருக்குச்வருகிறார். ராஜ்குமார் பேசிய கேஸட்டுக்களை, ராஜ்குமாரின் குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவையும் சந்திக்கிறார்கள்.
கோபத்தில் ரஜினி:
இந்த முறை, ராஜ்குமார் எப்படியும் வந்து விடுவார் என்று எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்த் மிகவும் அப்செட்ஆகிவிட்டார்.
அவர் இதுகுறித்துக் கோபாலிடம் கூறுகையில் நானும் வருகிறேன், கர்நாடக முதல்வரை சந்திப்போம். இதற்கு ஒருமுடிவு உடனே தெரிந்தாக வேண்டும். ப்ர்ஸனலாக நான் ஏதாவது செய்ய வேண்டுமெனில் செய்கிறேன். ராஜ்குமார்கடத்தப்பட்டு 40 நாட்கள் ஆகப் போகிறது. என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
ராஜ்குமார் எவ்வளவு பெரிய மனிதர்? அவர் காட்டுக்குள்ளிருந்து கஷ்டப்படுவதை என்னால் இனியும் உட்கார்ந்துபார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications