பெங்களூரில் ரஜினி, கோபால், கிருஷ்ணா தீவிர ஆலோசனை
சென்னை:
வீரப்பன் அனுப்பிய கேசட்டுடன் நக்கீரன் கோபால், நடிகர் ரஜினி காந்த் ஆகியோர் புதன்கிழமை இரவு பெங்களூர்வந்து சேர்ந்தனர்.
சத்தியமங்கலம் காட்டில் வீரப்பனைச் சந்தித்து விட்டு வீரப்பன் கொடுத்தனுப்பிய கேசட்டுன், கோபால் சென்னைதிரும்பினார். அந்த கேஸட்டில் வீரப்பன் பேசவில்லை. சும்மா நான் பேச அவங்க பேசன்னு என்னது இது,என்னோட இரண்டு கோரிக்கைகளை உடனே நிறைவேற்றச் சொல்லுங்க பிறகு பார்ப்போம் என்று கோபாலிடம்கூறிவிட்டான் வீரப்பன்.
புதன்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த கோபால்செய்தியாளர்களிடம் கூறுகையில், வீரப்பனுடன் பேச்சுவார்த்தை இத்துடன் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தைதொடராது. வீரப்பன் விதித்த 13 கோரிக்கைகளில் அவனுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் பதிலை தெரிவித்துஓரளவு சமாதானப்படுத்தி விட்டேன்.
அவனது இரண்டு கோரிக்கைகளில் மட்டும் மிகவும் கண்டிப்பாக இருக்கிறான். அதாவது கர்நாடக சிறையில் உள்ள121 தடா கைதிகளை விடுவிப்பது மற்றும் தமிழக சிறையில் உள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுதலை செய்வதுஇந்த இரண்டு கோரிக்கைகளில் மிகவும் உறுதியாக இருக்கிறான்.
கடந்த வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கே எங்கள் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. உச்சநீதிமன்றத்தில்இருந்து விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துத்தான் அங்கே காத்திருந்தேன் என்றார் கோபால்.
பெங்களூர் வந்தனர்
இந்த நிலையில், புதன்கிழமை மாலை கோபாலும், ரஜினியும் பெங்களூர் வந்தனர். நேராக முதல்வர் கிருஷ்ணாவின்வீட்டுக்குச் சென்றனர். அங்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவும் வந்து சேர்ந்தார். அனைவரும் தீவிரஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்களுடன் கன்னட நடிகர் அம்பரிஷூம் கலந்து கொண்டார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி காந்த், கர்நாடக முதல்வருடன்என்ன பேசப் போகிறேன் என்பதைக் கூற முடியாது. ராஜ்குமாரின் விடுதலையை எதிர்பார்த்திருக்கும் கோடானுகோடி மக்களில் நானும் ஒருவன் என்றார்.
கோபால் சென்னை வந்த பிறகு அவரை ரஜினி சந்தித்தார். இந்த முறை, ராஜ்குமார் எப்படியும் வந்து விடுவார்என்று எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்த் மிகவும் அப்செட் ஆகிவிட்டார்.
இதுகுறித்துக் கோபாலிடம் கூறுகையில் நானும் வருகிறேன், கர்நாடக முதல்வரை சந்திப்போம். இதற்கு ஒரு முடிவுஉடனே தெரிந்தாக வேண்டும். பர்ஸனலாக நான் ஏதாவது செய்ய வேண்டுமெனில் செய்கிறேன். ராஜ்குமார்கடத்தப்பட்டு 40 நாட்கள் ஆகப் போகிறது. என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
ராஜ்குமார் எவ்வளவு பெரிய மனிதர்? அவர் காட்டுக்குள்ளிருந்து கஷ்டப்படுவதை என்னால் இனியும் உட்கார்ந்துபார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
வீரப்பன் பிடிவாதம் - கோபால்
முன்னதாக புதன்கிழமை காலை சென்னை திரும்பிய கோபால், தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரப்பன் பிடிவாதமாக இருக்கிறான். கோரிக்கைகள்நிறைவேறினால்தான் ராஜ்குமார் விடுதலை என்று கூறுகிறான் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications