மேயர்களின் சொத்துக் கணக்கு கேட்கிறது ஹைகோர்ட்
சென்னை:
சென்னை, மதுரை மேயர்கள், துணை மேயர்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு 4வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி மாநகராட்சி கமிஷனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வக்கீல்கள் பிரிவு மாநிலச் செயலாளர் பிலிப் தாமஸ். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாநகராட்சி மேயர்களின் சொத்து விவரங்களைத் தெரிந்து கொள்ளபொதுமக்களுக்கு உரிமை உள்ளது.
சென்னை மேயர் ஸ்டாலின், துணை மேயர் ஜெயச்சந்திரவதனா, ஆகியோரின் சொத்து விவரங்களைவெளியிடுமாறு மாநகராட்சிக்கு விண்ணப்பித்துள்ளேன். எனவே அவர்கள் பதவியேற்ற நாள் முதல் அவர்களதுசொத்து விவரங்களை வெளியிட மாநகராட்சிக் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே போல் வக்கீல் தமிழ்செல்வன் என்பவர் மதுரை மேயர் குழந்தைவேலு, துணை மேயர் மிசா. கணேசன்ஆகியோரின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்திருந்தார்.
இரு மனுக்களையும் விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி என்.கே.ஜெயின், நீதிபதி ரவிராஜ பாண்டியன்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி இரு மாநகராட்சிக்கமிஷனர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications