பெண்ணைக் கற்பழித்த 2 போலீஸ்காரர்களுக்கு அடி
ஜெயங்கொண்டம்:
திருச்சி மாவட்டம் ஜெயங்கொண்டம் நகருக்கு அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணைக் கற்பழித்த இரண்டுபோலீஸ்காரர்களைப் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சில தினங்களுக்கு முன் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மீன்சுருட்டி பகுதியில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டது. கலவரம் பரவாமல் தடுப்பதற்காக சிறப்புக்காவல்படை போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முருகன் (26), ராஜாராம் (29) ஆகிய இரண்டு போலீஸ்காரர்களும் பாதுகாப்பு பணிக்காக ஜெயங்கொண்டம் பகுதிக்கு அனுப்பப்பட்டனர்.பாதுகாப்பிற்காக சென்ற இவர்கள் இருவரும் சொக்கலிங்கபுரம் பகுதியிலுள்ள கலியமூர்த்தி என்பவரது வீட்டிற்குச் சென்றனர்.
அங்கு கலியமூர்த்தியின் மகள் ரேகா (17) தனியே தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபோலீஸ்காரர்கள் முருகனும், ராஜாராமும் தூங்கிக் கொண்டிருந்த ரேகாவைக் கற்பழித்தனர். ரேகா கூச்சல் போட்டுக் கத்தினார்.
உடனடியாகப் பக்கத்து வீடுகளிலிருந்தவர்கள் அங்கு வந்து இரண்டு போலீஸ்காரர்களுக்கும் தர்மஅடி கொடுத்து வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்கள்இருவரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
கற்பழிப்புச் சம்பவம் குறித்து மீன்சுருட்டி காவல்நிலையத்தில் ரேகா புகார் கொடுத்தார். ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. இச்சம்பவத்தில் குற்றவாளிகளானஇரண்டு போலீஸ்காரர்களையும் தற்காலிக வேலைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். டி.எஸ்.பி.உத்தரவின்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications