மசூதி வழியே தான் விநாயகர் ஊர்வலம்-இந்து முன்னணி அறிவிப்பு
சென்னை:
வரும் 10ம் தேதி சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கிறது. திருவல்லிக்கேணி மசூதி வழியாகவேஊர்வலம் செல்வோம் என இந்து முன்னணியினர் தீவிரமாக இருப்பதால் காவல்துறையினர் கவலையில் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் பேசிய இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன், 10ம் தேதி ஐஸ் ஹவுசில்இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்படும். திருவல்லிக்கேணி மசூதி வழியாகத்தான் ஊர்வலம் செல்வோம்.
போலீசார் தடை விதித்தாலும் அதையும் மீறி செல்வோம். மசூதி பக்கமாக நாங்கள் செல்லவில்லை. நாங்கள்செல்லும் வழியில் தான் மசூதி இருக்கிறது.
இந்த வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி கோரி 3 மாதங்களுக்கு முன்பே காவல்துறையிடம் கடிதம்கொடுத்தோம். ஆனால், அனுமதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.
போலீசார் எங்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். ஆனால், அரசியல் நெருக்கடி காரணமாக ஒத்துழைப்பு தரமறுக்கிறார்கள். அனுமதி தர அரசு மறுத்தால், வரும் தேர்தலில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வோம்.
இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.
ஒவ்வொரு முறையும் சென்னையில் விநாயகர் ஊர்வலம் துப்பாக்கிச் சூடு, போலீஸ் தடியடி என்று தான் முடிவதுவழக்கம். இந்த முறையாவது அமைதியாக நடக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர் பொது மக்கள். கூடவேகாவல்துறையினரும் தான்.












Click it and Unblock the Notifications