சென்சஸ் கணக்கெடுப்பில் குளறுபடி.. சங்கரய்யா
சென்னை:
தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுவோர் குறித்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் (பி.பி.எல்.) பெரும் குளறுபடிநடந்துள்ளது என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சங்கரய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் அண்மையில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் நகர்புறங்களிலும்,கிராமப்புறங்களிலும் ஏழ்மை நிலையில் உள்ள கணிசமான மக்கள் பெயர் இடம் பெறவில்லை.
தமிழகத்தில் குடும்ப அட்டை வழங்குவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு எல்காட் நிறுவனம் தயாரித்துக் கொடுத்த பட்டியலையும், தமிழக அரசின்மக்கள் நலப்பணியாளர்கள் கொடுத்துள்ள விபரங்களையும் ஆதாரமாக்கி தமிழக அரசு ஒரு அரை குறையான பட்டியலை தயாரித்துள்ளது.
வறிய நிலையில் வாழும் விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள். திருமணமாகாத வயதான பெண்கள், தலித் மக்கள், சிறுபான்மைசமூகத்தினர் கணிசமானோர் பட்டியலில் இடம்பெறவில்லை. பின் தங்கிய மாவட்டமான திருவண்ணாமலையில் 5 சதவீதம் தலித் மக்கள் கூடபட்டியலில் இடம் பெறவில்லை என்பதிலிருந்தே பட்டியலின் தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது.
எந்தவித முன் அறிவிப்பும், வெளிப்படைத்தன்மையுமின்றி ரகசியமாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய - மாநில அரசுகளின்பல்வேறு நலத் திட்டங்களும் - உதவிகளும் உண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் கணிசமான மக்களுக்கு கிடைப்பதில்லை.
இது மத்திய மாநில அரசுகளின் தாராளமய பொருளாதாரக் கொள்கை பாதிப்பினால் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ள ஏழை எளியமக்களுக்கு பா.ஜ.க தி.மு.க அரசு இழைத்துள்ள அநீதியாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழுசுட்டிக்காட்டுகிறது.
ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள குறைபாடுகளை நீக்கவும் , வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து மக்களும்பட்டியலில் இடம் பெறவும் நலத்திட்ட பயன்கள் எளிய மக்களுக்குச் சென்றடைய உதவிடும் வகையிலும் புதிய பட்டியலை , வெளிப்படைத் தன்மையோடுதயாரித்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது என்றார் சங்கரய்யா.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications