பிற மதங்களை அழிக்காதீர்.. தயானந்த சரஸ்வதி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
பிற மதத்தை இழிவு படுத்தவோ, அழிக்கவோ, கேலிப்பொருளாக்கவோ கூடாது என்று ஐ.நா.சபை மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொண்டசுவாமி தயானந்த சரஸ்வதி வலியுறுத்தினார்.
மில்லினியம் வருடக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், பல நூற்றாண்டுகளாக பிற மதத்தை இழிவுபடுத்தும் செயல் நடந்து வருகிறது. இதுதொடர்ந்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது கலாச்சார மீறல்.
ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் பிற மதத்தையோ, அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையோ குறை கூறுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது.
இறையியலில் எங்கேயாவது பிற மதத்தை அழியுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று மதத்தலைவர்கள் கூர்ந்து நோக்க வேண்டும் என்றார்தயானந்த சுவாமி.












Click it and Unblock the Notifications