ஜெயாவின் லண்டன் ஸ்டார் ஹோட்டல் விவகாரம் சூடுபிடிக்கிறது
சென்னை:
லண்டனில் ஜெயலலிதா வாங்கியுள்ளதாக கூறப்படும் 248 கோடிரூபாய் ஹோட்டல் விவகாரம் பூதாகரமாகக் கிளம்பிக் கொண்டிருக்கிறது.
லண்டன் அருகில் உள்ள தீவு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு இரண்டு ஹோட்டல்கள் இருக்கிறது என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஜெயலலிதா மற்றும்அ.தி.மு.க எம்.பி தினகரன் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கிடைத்த ஆதாரங்கள் மற்றும் லண்டன் நீதிபதிக்கு தனி நீதிமன்ற நீதிபதி எழுதிய கடிதம்போன்றவற்றின் நகல்களைக் கேட்டு 1-வது தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு மீது இரு தரப்பு வழக்கறிஞர்களும் விவாதம் நடத்தி வருகின்றனர். அரசு வழக்கறிஞர் சோமசுந்தரம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில்வாதாடிய போது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா சாதாரண நபர் அல்ல, தற்பொழுது பதவியில் இல்லாவிட்டாலும் சகலவல்லமை வாய்ந்தவர்.
தன்னுடைய பணபலம், படை பலத்தை பயன்படுத்தி எதையும் அவரால் சாதிக்க முடியும். ஆடிட்டர் ராஜசேகரன் தாக்கப்பட்ட விவகாரமே இதற்கு ஒருஉதாரணம்.
இது இன்டர்நெட் காலம். ஆதாரங்கள் அவர் கைக்குப்போனால் போயஸ் தோட்டத்தில் அமர்ந்து கொண்டே ஒரு பட்டனைத்தட்டி லண்டனில் போலீஸார்மேற்கொண்டுள்ள புலன் விசாரணையை ஸ்தம்பிக்கச் செய்து விடுவார்.
எனவே ஆதாரம் கேட்டு ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யும் படி வேண்டுகிறேன்.
இதையடுத்து அரசு வழக்கறிஞருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி வாதிட்டார்:
காந்தி மீது கூட பிரிட்டிஸார் காலத்தில் வழக்குகள் இருந்தன. சுதந்திரம் அடைந்த பிறகுதான் காந்தி, மகாத்மா காந்தி ஆனார். ஜெயலலிதா மீதுதற்பொழுது நடைபெறுவது வழக்குதான். ஒரேடியாக அவர்மீது புழுதி வாரித் தூற்றாதீர்கள். அவர் ஒரு முன்னாள் முதல்வர் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு. யானை படுத்தாலும் குதிரை மட்டம் தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஜெயலலிதா மனுவை நிராகரிப்பதுசட்டப்படி தவறாகும் என்று அவர் வாதாடினார்.












Click it and Unblock the Notifications