ராஜ்குமார் வீட்டில் கருணாநிதி: எதிர்த்து கோஷமிட்ட ரசிகர்கள் கைது
பெங்களூர்:
பெங்களூர் வந்த தமிழக முதல்வர் கருணாநிதி கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்று ராஜ்குமாரின்மனைவி பர்வதம்மா, அவரது மகன்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது ராஜ்குமாரின் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த அவரது ரசிகர்கள் கருணாநிதிக்கு எதிராக கோஷம்எழுப்பினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
சிறிது நேரம் ராஜ்குமாரின் வீட்டில் இருந்த கருணாநிதி அங்கிருந்து விமான நிலையம் சென்றார். 1.30 மணிவிமானத்தில் சென்னை திரும்பினார்.
கருணாநிதி கிளம்பிய பின்னர் நிருபர்களிடம் பர்வதம்மா கூறுகையில், நம்பிக்கையுடன் இருக்குமாறு கருணாநிதிகூறினார். ராஜ்குமாரை மீட்க இரு அரசுகளும் நல்லதொரு திட்டத்தை அமல்படுத்தி வருவதாகவும் கருணாநிதிகூறினார் என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, ராஜ்குமார் கடத்தலால் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.என்னைப் போல எண்ணற்ற தமிழர்களும், கர்நாடக மக்களும் கண்ணீருடன் தான் அவரது விடுதலைக்காக காத்துக்கொண்டுள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications
