பிருத்வி ஏவுகணைத் தயாரிப்பா? நோ...நோ என்கிறார் பெர்னாண்டஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

300 பிருத்வி ஏவுகணைகளைத் தயாரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது என்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று மத்திய பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 25-ம் தேதி அமெரிக்க பாதுகாப்பு செய்திப் பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்தியா 300 பிருத்வி ஏவுகணைகளைத் தயாரிக்கத்திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தரவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கையெழுத்திட்டுள்ளது. 200 மில்லியன் டாலர் இதற்குச் செலவாகும் என்றுகூறப்பட்டிருந்தது. இதை தற்போது பெர்னாண்டஸ் மறுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில், அமெரிக்க செய்தி தவறானது. சிறிதும் உண்மை இதில் இல்லை. இதுபோன்ற முடிவு எதையும்அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் சமீபத்தில் எடுக்கவில்லை.

அமெரிக்க செய்தியில் கூறியுள்ள தகவல்களில் பல தவறானவை. விமானப்படை மற்றும் கடற்படையில் பயன்படுத்தக் கூடிய வகையிலான பிருத்விஏவுகணைகள் இன்னும் பரிசோதனை அளவிலேயே உள்ளன என்றார் அவர்.

விமானப் படைத் தரப்பில் தெரிவிக்கையில், ராணுவத்திற்குப் பயன்படுத்தப்படும் பிருத்வி ஏவுகணைகள் சோதனைக் கட்டத்தை முடித்து தற்போது தயாரிப்பில்உள்ளன.

ஆனால் விமானப் படைக்குத் தேவையான பிருத்வி ஏவுகணைகள், இன்னும் பரிசோதனை அளவிலேயே உள்ளன. இந்த வகை ஏவுகணைகள், 250கிலோமீட்டர் தூரம் செல்லக் கூடியதாகும். 500 கிலோ வெடிபொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த கடற்படைக்கான பிருத்வி ஏவுகணைகள் தோல்வியைத் தழுவின. தனுஷ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. எனவேகடற்படைக்குத் தேவையான பிருத்வி வகை ஏவுகணைகளைத் தயாரிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+