சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்னுச்சாமிக்கு ஜாமீன்
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி மற்றும் அவரதுகுடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டது.
சமீபத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனையும், அவரது குடும்பத்தினருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தனிநீதிமன்றம்தீர்ப்பளித்தது.
இதை ரத்து செய்யக் கோரியும், தங்களுக்கு ஜாமீன் தரக்கோரியும் பொன்னுசாமியும், அவரது குடும்பத்தாரும்சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த மனுக்களை நீதிபதி அக்பர் பாஷா காதிரி விசாரித்தார். பின்னர் நீதிபதி, முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமிஉள்பட குற்றம் சுமத்தப்பட்ட 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டார்.அவர்களை ஜாமினில் விடுதலை செய்யும்படியும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications