ஜெர்மனி தடகள அணியில் இந்தியப் பெண்
டெல்லி:
கல்கத்தாவை பூர்வீகமாகக் கொண்ட பெண், ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும்ஜெர்மனி அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த பெருமைக்குரியவர் சாந்தா கோஷ். இவரது தந்தையின் பூர்வீகம் கல்கத்தா. பலஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மனியில் குடியேறி விட்டனர். தடகள வீராங்கனையானசாந்தா, ஜெர்மனி அணியின் 4து400 தொடர் ஓட்ட அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஜெர்மனி அணி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐரோப்பிய கோப்பைப் போட்டியில்இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சிட்னி ஒலிம்பிக்கில் நிச்சயம் பதக்கம் வெல்லும்என எதிர்பார்க்கப்படுகிறது.
1975-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தவர் சாந்தா. இவருக்கு இந்தியக்குடியுரிமையும் இருக்கிறது. இவரது தந்தை பிரபாத் கோஷ், கல்கத்தாவில் பிறந்துவளர்ந்தவர். தாய், ஆர்லென்டே ஜெர்மனியர். சாந்தா பிறந்து, வளர்ந்ததுஜெர்மனியில்தான்.
உளவியல் மாணவியமான சாந்தா, 1997-ம் ஆண்டு முதல் ஜெர்மன் தேசிய தடகளஅணியில் இடம் பெற்று வருகிறார். தற்போது சாந்தா இடம் பெற்றுள்ள அணியில்,முன்னாள் உலக ஜூனியர் சாம்பியன் கிரிட் பிரூயர், ஜெர்மன் தேசிய சாம்பியன் உடாரோலன்டர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இதுவரை இந்தியாவுக்கு சில முறைகளே சாந்தா வந்துள்ளார். இருப்பினும் சிலஉறவினர்கள் இன்னும் கல்கத்தாவிலேயே இருக்கின்றனர். கல்கத்தாவைச் சேர்ந்தஇரண்டு ஏழைச் சிறுமிகளின் கல்விச் செலவை சாந்தாதான் ஏற்றுக் கொண்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
1997ம்ஆண்டு நடந்த ஐரோப்பிய கோப்பைப் போட்டியில், 22.80 விநாடிகளுக்குள்தனது தூரத்தை சாந்தா கடந்தார். அதில் அவரது அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.தற்போது 400 மீட்டர் ஓட்டத்திலும் சாந்தா கவனம் செலுத்தி வருகிறார். விரைவில்இதிலும் ஜெர்மனியின் முன்னணி வீராங்கனையாக வருவேன் என்று நம்பிக்கைத்தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் 1999-ல் நடந்த 100, 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் நான்காவதுஇடத்தைப் பிடித்தார். இந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில்மூன்றாவதாக வந்தார். இதையடுத்து ரிலே போட்டியில் கலந்து கொள்ள அவர் தகுதிபெற்றார்.
ஜெர்மனிக்குப் பெருமை சேர்ப்பதுடன் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க சிட்னிகிளம்பியுள்ள சாந்தாவை வாழ்த்துவோம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications