ஐம்பதிலும் ஆசைவரும்!: கள்ளக் காதலில் கசங்கிய காக்கிச்சட்டை
திருநெல்வேலி:
திருநெல்வேலி பாட்டப்பத்து வாஞ்சிநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஜாபர்கான். இவர் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி மும்தாஜ் கேரளாவைச்சேர்ந்தவர். மும்தாஜ்க்கும், தச்சநல்லூரில் எஸ்.ஐயாக பணிபுரியும் முகமது அலிஎன்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
எஸ்.ஐயின் வீடு பேட்டையில் இருக்கிறது. எஸ்.ஐ முகமது அலி, மும்தாஜின் கணவர் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குஅடிக்கடி சென்றுவந்தாராம்.
இதை அந்தப் பகுதியில்உள்ள மக்களே கண்டித்துள்ளனர். எஸ்.ஐயிடமே ஒரு சிலர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும்கள்ளக்காதல் கண்ணை மறைக்க, தொடர்பு தொடர்ந்தது. இதனால் வேதனையடைந்த மக்கள் எரிச்சலுடன் இவர்களைகண்காணித்து வந்தனர்.
இந் நிலையில், பாட்டப்பத்து பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான மக்கள் வந்திருந்தனர் ஊரேகோயிலில் திரண்டிருக்க, வழக்கம் போல முதாஜின் வீட்டிற்கு வந்தார் எஸ்.ஐ முகமது அலி. வீட்டிற்குள் நூழைந்துவிட்டர். இதைகவனித்து விட்ட கிராமத்தினர் இதற்கொரு முடிவு கட்டிவிடலாம் என்று, வீட்டை முற்றுகையிட்டனர்.
வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டு எஸ்.ஐயையும், மும்தாஜையும் சிறைப் பிடித்தனர். எஸ்.ஐக்கு தர்ம அடி விழுந்தது. அந்தசமயம் காக்கி பேண்டும், பனியனும் அணிந்திருந்தார் எஸ்.ஐ. மக்கள் உடனே துணைமேயர் விஸ்வநாத பாண்டியனுக்கு தகவல்கொடுத்தனர். துணைமேயர், டி.ஐ.ஜி அஷிதோஸ் சுக்லாவுக்கு தகவல் கொடுத்தார்.
இதற்கிடையில் பொது மக்களிடம், என்னை வெளியே விடாவிட்டால் தீ வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கையில்மண்ணெண்னைய் கேனுடன் மிரட்டினாராம் முகமது அலி. அதற்கும் மக்கள் கதவைத் திற்காமல் இருந்துவிட, வீட்டில் உள்ளகாஸைத்திறந்து விட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியிருக்கிறார்.
நீ தற்கொலை செய்து கொண்டு எங்கள் மீது பழிபோட பார்க்கிறாயா என்று மக்கள் கதவைத் திறந்து, எஸ்.ஐ யை பிடித்து அடித்துஉதைத்தனர். அவர் மயங்கிவிழுந்தார். தகவல் அறிந்த திருநெல்வேலி துணைக் கமிஷ்னர் வெங்கடாசலம் விரைந்து ஒடினார்.
பொதுமக்களிடம் இருந்து கள்ளக்காதலர்கள் இருவரையும் போலீஸார் மீட்டு டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் முகமது அலி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
தச்சநல்லூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த முகமது அலிக்கு வயது ஐம்பது, மும்தாஜூக்கு வயது முப்பத்தெட்டு.












Click it and Unblock the Notifications