அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது குறித்து ராமதாஸ் மெளனம்
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் சேரும்படி பா.ம.க.வுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது பற்றி கருத்து சொல்லகட்சியின் நிறுவனர் ராமதாஸ் மறுத்து விட்டார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றுஅ.தி.மு.க .அவைத் தலைவர் காளிமுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
பா.ம.க.வுக்கு பகிரங்க அழைப்பு விடும் வகையில் அமைந்திருந்த இந்த அறிக்கை பற்றி தர்மபுரியில்ராமதாசிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், அது காளிமுத்துவின் கருத்து. அதைப் பற்றி நான் எந்த கருத்தும் சொல்லவிரும்பவில்லை என்று மட்டும் பதிலளித்த ராமதாஸ், அ.தி.மு.க.வின் அழைப்பை ஒட்டுமொத்தமாகநிராகரிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில், தி.மு.க. கூட்டணியில் இப்போது நாங்கள் இருக்கிறோம். தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எக்காரணத்தை கொண்டும் நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம். பங்கு தந்தால் தான் கூட்டணி என்றும் வலியுறுத்த மாட்டோம்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி எடுக்கும் நடவடிக்கைகள் திருப்திஅளிக்கிறது. ராஜ்குமார் விடுவிப்புக்கு பின்னர் கர்நாடக தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் வராதவாறுகர்நாடக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தூங்கிக் கிடந்த வன்னியர் சமுதாயத்தை தட்டி எழுப்புவதாக கூறி சென்னையில் ஒரு மாநாடுநடத்தப்பட்டது. அந்த மாநாடு அரசே நடத்திய மாநாடு தான். 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள்அந்த மாநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு பஸ்சிலும் 5 பேர் தான் சென்றுள்ளனர். அவர்கள்யாரும் வன்னியர்களே அல்ல.
வன்னியர்களே அல்லாத ஒரு மாநாட்டை வன்னியர்கள் விழிப்புணர்ச்சி மாநாடு என்று நடத்தியதற்காக நான்பாராட்டுகிறேன் என்றார் ராமதாஸ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications