மயக்க ஊசி போட்டு பெண்ணைக் கற்பழித்த டாக்டர்
பனைக்குளம் (ராமநாதபுரம்):
தனது மருத்துவமனையில் வேலை செய்து வந்த பெண்ணை, மயக்க ஊசி போட்டுக் கற்பழித்த சித்த டாக்டரைப் போலீஸார் கைது செய்தனர்.
மண்டபம் அகதிகள் முகாம் பகுதியில் அன்னை கிளினிக் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கேயே மதுரை மீனாட்சி மிஷன்மருத்துவமனையின் தகவல் மையமும் உள்ளது. கிளினிக்கை சித்த வைத்திய டாக்டர் மணி என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம் ராமநாதபுர மாவட்டம்கொடிக்குளத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவரின் மகள் சங்கீதா (17) வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே சங்கீதாவுக்கு சமீபத்தில் கையில் கொப்புளம் ஏற்பட்டது. இதைப் பார்த்த டாக்டர், அவருக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி மயக்க ஊசிபோட்டார். அவர் மயக்கமாக இருக்கும் போதே அவரைக் கற்பழித்துள்ளார்.
மயக்கம் தெளிந்த சங்கீதா, தனக்கு நேர்ந்த நிலை குறித்து அழுதார். இவ்விஷயம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மணிமிரட்டியுள்ளார். இதையடுத்து சங்கீதா அமைதியாக இருந்து விட்டார்.
இந்த நிலையில், 40 நாட்களில் சங்கீதா கர்ப்பமடைந்தார். இதையறிந்த டாக்டரின் மனைவி மேகலா, சங்கீதாவை ராமநாதபுரம் மருத்துவமனைஒன்றுக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தார்.
சங்கீதாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுவதைக் கண்ட அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது சங்கீதா நடந்த விவரங்களைக் கூறினார்.இதையடுத்து போலீஸில் புகார் கூறப்பட்டது.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் மணியைக் கைது செய்தனர். அவரது மனைவி மேகலா தலைமறைவாகிவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications