இந்தியாவுடன் உறவு நன்றாக உள்ளது ... இலங்கை அமைச்சர்
வாஷிங்டன்:
இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான உறவு நன்றாக உள்ளது என்று ஐ.நா.மில்லினியம் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை வெளியுறவுத் துறைஅமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் சந்திரிகா சார்பில் ஐ.நா.மாநாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டு லட்சுமண் கதிர்காமர் பேசியதாவது:
இலங்கையில் தனிநாடு கேட்டு விடுதலைப்புலிகள் கடந்த 17 வருடங்களாகப் போராடி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் ராணுவ வீரர்களும்,புலிகளும் பலிகடா ஆக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் கேட்பது போல் தனிநாடு கொடுப்பது என்பது நடக்காத காரியம். தனிநாடு கேட்டுப் போராடும் புலிகளுக்காக இந்தியா பச்சதாபம்காட்ட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.
இதுவரை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு மிகவும் நன்றாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த உறவு வலுப்பட்டுள்ளது.இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையேயான எப்படி உள்ளதோ அதே போல் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் எந்தபிரச்சனையும் இல்லை. இலங்கைக்கு இந்தியா பல வழிகளில் உதவி புரிந்து வருகிறது.
இந்தியாவிலிருந்து விடுதலைப் புலிகளக்கு ஆயுதங்கள் வருகின்றன. ஆனால் நீண்ட கடற் பகுதியைக் கொண்ட இந்தியா மற்றும் தமிழக அரசுகளினால்,கடற்கரைப் பகுதியை முழுவதும் கண்காணிக்க முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு, மூன்று எம்.பி.க்களை வைத்து கட்சி நடத்தும் ம.தி.மு.க.மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் விடுதலைப்புலிகளுக்குஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அரசியல் லாபம் தேடும் வகையில் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.
பிரதமர் வாஜ்பாயிடமும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடமும் அவர்கள் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தனிநாடு கோரிக்கையைநிறைவேற்றக் கோரியும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் வாஜ்பாயும், ஜஸ்வந்த் சிங்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை மிகவும் சாதுர்யமாகச்சமாளித்து வருகிறார்கள்.
தற்போது தமிழக மக்களே புலிகள் மிகவும் ஆபத்தானவர்கள். அபாயகரமானவர்கள் என்று புரிந்து கொண்டு விட்டனர் என்றார் கதிர்காமர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications