சம்பளம் தராததால் விலகினேன் ... அரசு வக்கீல்

Subscribe to Oneindia Tamil

கோவை:

தேவையான செலவு தொகையை அரசு வழங்காததால், குண்டு வெடிப்பு வழக்கில்வாதாட மறுத்ததாக அரசு தரப்பு சிறப்பு வக்கீல் தெரிவித்துள்ளார்.

உடுமலைப்பேட்டை குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் கோவை கலவர வழக்குகளில்வாதாட அரசு தரப்பு வக்கீலாக சவுந்தர்ராஜன் (70), நியமிக்கப்பட்டார். இவர்சென்னையைச் சேர்ந்தவர்.

உடுமலைப் பேட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக செப்டம்பர் 11-ம் ததிவிசாரணைக்கு வந்த வழக்கின்போது ஆஜராகிய சவுந்தர்ராஜன், வழக்கில் தொடர்ந்துவாதாடப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

அரசுத் தரப்பில் இது மிகவும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வழக்கறிஞர் சவுந்தர்ராஜன்ஏன் திடீரென விலகினார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், தனதுவிலகலுக்கு போதுமான சம்பளம் தரப்படாததே காரணம் என்று சவுந்தர்ராஜன்கூறியுள்ளார்.

நிருபர்களிடம் சவுந்தர்ராஜன் கூறியதாவது:

நான் சென்னையில் குடியிருந்து வருவதால் கோவையில் தங்கி வாதாடி வருகிறேன்.கடந்த மூன்று மாத காலமாக அரசு எனக்கு போக்குவரத்து செலவு, தங்கும் விடுதிச்செலவு, குறைந்தபட்ச வழக்கறிஞர் கட்டணம் ஆகிய எதையுமே வழங்கவில்லை.

இந்நிலையில், தொடர்ந்து இந்த வழக்கில் வாதாடுவது கடினமான காரியமாக உள்ளது.பல முறை இதுகுறித்து அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் எதுவும் இல்லை. எனவேதான்இந்த முடிவை அறிவித்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளிடமிருந்து எனக்கு வந்தமிரட்டல் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதனை நான் பொருட்படுத்தவில்லை.தொடர்ந்து வழக்கில் ஆஜராகி வந்தேன் என்றார் அவர்.

இந்நிலையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை செப்டம்பர் 12-ம் தேதிவிசாரணைக்கு வருகிறது. இதில் சவுந்தர்ராஜன் ஆஜராக வேண்டும் என அரசு சார்பில்சி.பி.சி.ஐ.டி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் சவுந்தர்ராஜன்ஆஜராவாரா என்பது குறித்துத் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+