மில்லனியம் மாநாட்டுத் தீர்மானம் ..இந்தியா திருப்தி
நியூயார்க்:
ஐ.நா.மில்லினியம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இந்தியாவின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே உள்ளன என்றுஇந்தியாவிற்கான ஐ.நா.சபை நிரந்தரப் பிரதிநிதி கமலேஷ் சர்மா தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
ஐ.நா.மில்லினியம் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு ஆதரவாகவே உள்ளன. இதில் நாங்கள் மிகவும்திருப்தியடைந்துள்ளோம்.
பிற நாடுகளின் உள்விவகாரங்களிலோ பாதுகாப்பு விவகாரங்களிலோ எந்த நாடும் தலையிடவோ, குறுக்கிடவோ கூடாது என்ற தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் இந்தியாவுக்கு உதவும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்தியாவுக்கு மனிதாபிமான தலையீடும்,குடிமக்கள் பாதுகாப்பும் அதிகம் தேவைப்படுகிறது. பிற நாடுகளின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை.
ஐ.நா. சபை மில்லனியம் மாநாட்டில் முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றிய கிளின்டன், ஒவ்வொரு நாடும் தேசிய பாதுகாப்பில் அதிக கவனம் கொண்டுசெயல்பட வேண்டும்.யாருடைய அச்சுறுத்தலுக்கும் பயப்படக் கூடாது.
மக்களைக் காப்பாற்றுவதும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு நாடும் நடந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார். இதை ஆதரிக்கும் வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தியா வலியுறுத்திய படி, வர்த்தகம், பொருளாதாரம் போன்ற அனைத்துத் துறையிலும் அனைத்து நாடுகளும், சுதந்திரமாகவும், ஒருங்கிணைந்தும்செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல் நாட்டை எதிர்நோக்கியிருக்கும் தீவிரவாதத்தை ஒவ்வொரு நாடும் முறையான திட்டம் வகுத்து எதிர்கொள்ள வேண்டும் என்றும்தீர்மானிக்கப்பட்டது. இதுவும் இந்தியா வலியுறுத்திய தீர்மானமாகும் என்றார் கமலேஷ் சர்மா.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications