ரூ. 200 கோடி சுருட்டிய நிதி நிறுவன அதிபர்கள் கைது
சென்னை:
ரூ. 200 கோடி பொதுமக்கள் முதலீட்டுப் பணத்தை மோசடி செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் எம்.சி.சி. நிதி நிறுவனம் என்ற நிறுவனம் சமீப காலம் வரை இயங்கி வந்தது. குறைந்த முதலீடு, அதிகவட்டி என்ற போலி நிதி நிறுவனங்களின் வழக்கமான பல்லவியுடன் இந்த நிறுவனமும் இயங்கி வந்தது.
இந்த நிறுவனத்தில் ரூ. 200 கோடி வரை முதலீடு சேர்ந்ததாகத் தெரிகிறது. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் முதலீடுசெய்திருந்தனர். இந்த நிலையில், முதலீட்டுக் காலம் முடிவடைந்தவர்களுக்கு அவர்களுக்குரிய வட்டி மற்றும் அசலைத் திருப்பித் தராமல் நிறுவனம்இழுத்தடித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ரூ. 171 கோடி மதிப்பில் புதிதாக சில நிறுவனங்களை எம்.சி.சி. நிறுவனம் துவக்கியது. இதனால் அதிர்ச்சியுற்ற வாடிக்கையாளர்கள்உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினர். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சி.சி. நிதி நிறுவன விவகாரம் குறித்து பொருளாதாரக் குற்றத் தடுப்புத் துறைவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து எம்.சி.சி. நிறுவனம் மீது பொருளாதாரக் குற்றத் தடுப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. விசாரணையில் ரூ. 200 கோடி வரை மோசடி நடந்ததுதெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நிதி நிறுவன உரிமையாளர்களான தலைவர் வடிவேல், நிர்வாக இயக்குநர் ஜவஹர் வடிவேல் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications