ஜெ.வை சட்டை செய்வதே இல்லை .. கூறுகிறது பா.ஜ.க.
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொல்வதை நாங்கள் சட்டை செய்வதேஇல்லை என்று பாரதீய ஜனதாக் கட்சி பொதுச்செயலாளர் வெங்கையா நாயுடுதெரிவித்தார்.
சென்னையில் வெங்கையா நாயுடு அளித்த பேட்டி:
மேற்கு வங்காளத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஜனநாயகமும், சட்டம்ஒழுங்கும் கெட்டு விட்டது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக சென்று ஆய்வுசெய்த குழு, மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று சிபாரிசு செய்துள்ளது. அது மிகச் சரியானது.
ஜோதிபாசுவின் அரசுக்கு அந்த மாநில மக்களே எதிராக இருக்கிறார்கள். அவருடையநாட்கள் எண்ணப்படுகின்றன. அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள் இழந்துசொந்த மண்ணிலேயே அகதிகளை போல் வாழ்கின்றனர்.
கடந்த 18 மாதங்களில் அங்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. எனவே உடனடியாகநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் கருத்து. எந்த மாதிரியானநடவடிக்கை என்பதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். நாங்கள் அம்மாநிலஅரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
மேற்கு வங்க அரசை கலைக்க அரசு சதி செய்கிறது என்று ஜெயலலிதா கூறியிருப்பதுகண்டிக்கத்தக்கது. ஜெயலலிதாவுக்கு அங்கே என்ன நடக்கிறது என்ற. எதுவுமேதெரியாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பது தான் அவரது வேலை.ஜெயலலிதா சொல்வதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனத்தில் வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் இடையே எந்தமோதலும் இல்லை. அதுபற்றி வெளியான செய்திகள் வெறும் வதந்தி.
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு முயற்சியில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள்சரியான வழியில் சென்று கொண்டிருக்கின்றன. இதில் கருத்து வேறுபாடு வந்துவிடாமல் கவனமாக இருந்து ராஜ்குமாரை எப்படியாவது மீட்க வேண்டும் என்றார்நாயுடு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications