தீவிரவாதிகள் தாக்குதலில் 10 போலீஸார் பலி
கவுகாத்தி:
அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதியில் தீவிரவாத கொரில்லாக்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீஸார் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்தனர்.
கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் போர்லாங்பார் கிராமத்தில் போலீஸார் ரோந்து சென்ற வாகனங்கள் மீது மலைவாழ் பிரிவினைத் தீவிரவாதகொரில்லாக்கள் இத் திடீர் தாக்குதலை நடத்தினர்.
புதன்கிழமை நடந்த இத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 10 போலீஸார் பலியானார்கள்.
நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் ஐக்கிய மக்கள் ஜனநாயக சாலிடாரிட்டி அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் சேர்ந்து இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அஸ்ஸாம் மாநில டிஜிபி பி.வி. சுமந்த் தெரிவித்தார்.
கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் உள்பட காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்,போலீஸாரிடமிருந்து துப்பாக்கிகளையும், ரேடியோ கருவியையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications