மதுரை நரபலி .. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தையே அதிர வைத்த மதுரை நரபலி சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்குதமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகாபுரி சக்திபுரம் காளி கோவிலில் 9 பேர் நரபலிகொடுக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையை மட்டுமல்ல தமிழகத்தையே அதிர வைத்துள்ள இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீசார்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அழகாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள ஒரு மலைப் பகுதியில் சக்திபுரம் என்ற பகுதியை ஏற்படுத்தி அதில்காளி கோவிலை நிறுவியவர் சாமியார் நளினசேகரன். இக்கோவிலில் இவர் அமாவாசை, பவுர்ணமிநாட்களில் விசேஷ நள்ளிரவு பூஜைகள் நடத்தியுள்ளார்.

இந்த பூஜைகள் நடந்த மறுநாள் கோயிலை சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் யாராவது ஒருவர் உடல்உறுப்புகள் துண்டிக்கப்பட்டு, கண்கள் தோண்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது அடிக்கடி நடந்துள்ளது.

ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட கிராம மக்கள், பின்னர் கோவில் பூஜைக்கும்இந்த கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக உணர்ந்தனர். அதை கையும் களவுமாக பிடிப்பதற்காககிராம மக்கள் ரகசிய திட்டத்தோடு எச்சரிக்கையாக இருந்தனர். அப்போது நரபலிகொடுப்பதற்காக ஆள் கடத்த வந்த ஆட்டோவை சுற்றி வளைத்தனர். அக்கும்பலில் இருந்தஒருவனை பிடித்தனர்.

அவர் கொடுத்த தகவல்தான் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்தன. கொதித்து எழுந்த கிராமமக்கள் அந்த மர்மக் கோவிலை அடித்து நொறுக்கினர். ஆனால், தகவல் தெரிந்து சாமியார்தலைமறைவாகி விட்டார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் சிக்கினர்.

அவர்களை உள்ளூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கைமாநில குற்றப் புலனாய்வுத் துறை (சி.பி.சி.ஐ.டி) விசாரணைக்கு மாற்ற முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+