விவாகரத்தை ரத்து செய்யக் கோரும் மனைவி
சென்னை:
மனைவி கொடுமைப்படுத்தியதாகக் கூறி கணவன் பெற்ற விவகாரத்து உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளி ஆசிரியை ஒருவர் குடும்பநலநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்தவர் முரளி (43). இவர் ஆந்திராவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை வரலட்சுமி (40) என்பவரை காதலித்தார். இருவரும்காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அந்த பிரச்னையில் பிரிந்தனர். இதையடுத்து விவகாரத்து கோரி குடும்பநலநீதிமன்றத்தில் முரளி மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், எனக்கும் வரலட்சுமிக்கும் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி கோயிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக நான் 60ஆயிரம் ரூபாய் செலவு செய்தேன். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தோம்.
நான் குவைத் நாட்டில் பல ஆண்டுகள் பணியாற்றியவன். அந்த பணத்தை எனது குடும்பத்திற்கு நிறைய செலவு செய்தேன். திருமணத்திற்கு பிறகு அதிகளவில்என்னால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால், என் மனைவியோ வீடும், காரும் வாங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தினாள். என்னால்முடியவில்லை.
இதனால் கோபமடைந்த என் மனைவி என்னை துன்புறுத்த துவங்கினாள். இரவு நேரங்களில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது எழுப்பி அடிப்பாள்.
ஒரு நாள் இரவு என்னை அடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டாள். எங்களுக்கு குழந்தை இல்லை. இதற்காக சிகிச்சை பெற்று வந்தோம்.அதற்கும் என் மீது ஆத்திரம் கொண்டு அடித்து துன்புறுத்தி வந்தாள். சில நாட்களில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினாள்.
கத்தியை எடுத்துக் கொண்டு தன்னை தானே குத்திக் கொள்வதாக என்னை பயறுத்துவாள். காஸ் சிலிண்டரை திறந்து வைத்துக் கொண்டு தீ வைத்துவிடுவேன் என்றும், சாவுக்கு காரணம் நீ தான் என்று கடிதம் எழுதி வைத்து விடுவேன் என்றும் என்னை மிரட்டிக் கொண்டே இருப்பாள். இதனால்எனக்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.
ஒரு நாள் இருவருக்கும் இடையே உச்சகட்டச் சண்டை நடந்தது. ஆவேசமாக என்னைத் தாக்கிய அவள், கடைசியில் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள்.
அவளிடம் இருந்து எனக்கு விவகாரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார் முரளி. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பதில் மனு தாக்கல்செய்யுமாறு வரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், வரலட்சுமி கண்டு கொள்ளவே இல்லை. விளக்கமோ பதிலோ அளிக்கவில்லை. இதையடுத்துநீதிபதி விவகாரத்து வழங்குவதாக உத்தரவிட்டார்.
இப்போது மூன்று மாதங்களுக்கு பிறகு வரலட்சுமி குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் நான் எனது கணவருடன் சேர்ந்துவாழ விரும்புகிறேன். ஆனால், எனது கணவர் பொய்யான தகவல்களை சொல்லி விவகாரத்து பெற்று விட்டார். அதை ரத்து செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தியுள்ளார்.
இதற்கு கணவர் முரளி அளித்துள்ள பதிலில், என் மனைவி ஒரு பள்ளி ஆசிரியை. நோட்டீஸ் அனுப்பப்பட்டால் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதுநன்றாக தெரியும். ஆனால், அவர் தெரிந்தே பதில் அனுப்பாமல் இருந்து விட்டார். எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுகூறியுள்ளார். இந்த வழக்கு மீண்டும் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications