குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்:
குஜராத் மாநிலம் பாவ்நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதம் எதுவும்இல்லை.
இந்நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டது. நிலநடுக்கத்தால் மக்கள் பயத்தில் வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் ஓட ஆரம்பித்தனர்.இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லையெனிலும், சில வீடுகள் இடிந்து விழுந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை இதே பாவநகர் பகுதியில் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை தொடர்ந்து 5 மணிநேரம் நிலநடுக்கம் ஏற்பட்டதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 13 ம் தேதிகளில் பாவ்நகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications