சிகிச்சையின்போது கோமாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை 10,000
கோவை:
விபத்து காரணமாக சிகிச்சை பெற்று, மயக்க நிலையில் இருந்து மீளாமல் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேருக்கும் மேல் இறக்கின்றனர் எனகோவை மெடிக்கல் சென்டர் சேர்மன் டாக்டர் நல்ல பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் நல்ல பழனிச்சாமி கூறியதாவது:
சாலை விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைக்காக பலர் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களது காயத்தின் தன்மையைப் பொறுத்து சிகிச்சைஅளிக்கப்படுகிறது. காயமடையும் பலர் சிகிச்சையின்போது மயக்க நிலையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும், உடல் உறுப்புகள் விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரைக் காப்பாற்ற இயலாமல் போகிறது. இவ்வாறு இந்தியாவில் ஆண்டுஒன்றிற்கு 10 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளில் 80 முதல் 90 சதவீதம் பேர் முகக் காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த முகக் காயங்கள், பிளாஸ்டிக்அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது.
விபத்திற்கு முக்கிய காரணங்கள், பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுதல், அதிவேகமாகச் செல்லுதல் ஆகியவையே. இதோடு, தமிழகம்முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.
முறையான பயிற்சி பெற்ற டிரைவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். லைசென்ஸ் வழங்குவதில் நடக்கும் முறைகேடுகள்தான் இதற்குக் காரணமாகஅமைகிறது.
விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்க வேண்டும். இவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் விபத்துநடந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கென கோவை மெடிக்கல் சென்டர் விபத்து நடக்கும் இடத்திற்கு விரைந்து செல்லஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
கோவையில் இந்த விபத்து தொடர்பான கருத்தரங்கிற்கு கோவை மெடிக்கல் சென்டர் ஏற்பாடு செய்துள்ளது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 300டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications