பட்டினியால் வாடும் 80 கோடி மக்கள்
ஐக்கியநாடுகள் சபை:
உலகில் 80 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவுமற்றும் விவசாயக் கழகம் தெரிவித்துள்ளது.
உணவு உற்பத்தியில் பல விதமான விஞ்ஞான பூர்வமான முன்னேற்றங்கள்இருந்தாலும் உணவு உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளபோதிலும் போதுமானஉணவு இன்றி உலகின் 13 சதவீதம் பேர் பட்டினியாக இருப்பதாக அக் கழகத்தின்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு முன் 9 கோடியே 60 லட்சம் மக்கள் பட்டினியால் வாடினர்.அதோடு ஒப்பிடும் போது தற்போது 80 கோடி பேர் என்பது அதிர்ச்சியளிக்கக்கூடியஎண்ணிக்கை அல்ல.
உள்நாட்டுப் போரே பட்டனிக்குப் பெரும் காரணங்களாக அமைகிறது. இப்போரினால் ஏராளமான விளை நிலங்கள் அழிந்து உணவு உற்பத்திகுறைந்துபோனதற்குக் காரணம்.
இது தவிர இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் பயிர் இழப்பு, உணவின் கையிருப்பு,உணவுப் பொருள் பாதுகாப்பதில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் பட்டினிக்கும்,பட்டினியால் ஏற்படும் மரணத்துக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன.
இப் பிரச்சினையைத் தீர்க்க உயிரி தொழில்நுட்பத்தின் மூலம் நடவடிக்கைகளைமேற்கொள்வதுதான் ஒரே வழி என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications