For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் அமெரிக்காவுக்குத் தங்கம்

By Staff
Google Oneindia Tamil News

கே: கோபாலின் மூன்றாவது காட்டுப் பயணமும் தோல்வி அடைந்துள்ளது பற்றி?

ப: தோல்வி என்று எப்படிச் சொல்கிறீர்கள்? இந்த மூன்றாவது பயணம் தோல்வி அல்ல - என்று அவரே சொல்லியிருக்கிறாரே. ஏதோவெற்றி இருக்கிறது போலிருக்கிறது. அது என்ன வெற்றி - அந்த வெற்றி யாருக்கு ? என்பதுதான் புரியவில்லை.

கே: தவளை, தவளையாகத்தான் இருக்க வேண்டும். யானையாக மாற நினைத்தால் உடல் வெடித்து செத்து விடும் - காங்கிரஸ் கட்சியைப் பற்றிகாளிமுத்துவின் பேச்சு பற்றி ...?

ப: சரி. காங்கிரஸ் தவளையாகவே இருந்துவிட்டுப் போகட்டும் ; அ.தி.மு.க. யானையாகவே இருக்கட்டும். ஆனால், தவளையின் உதவியை நாடிய யானை -உலகத்தில் அ.தி.மு.க. யானையாக மட்டுமே இருக்க முடியும்.

கே: திராவிட இயக்கம் உலகுக்கே வழிகாட்டியாக உள்ளது என்கிறாரே வைகோ...?

ப: அமெரிக்கா, ரஷ்யா, பிரட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சைனா ... போன்ற பல நாடுகள் திராவிட இயக்க பாதையைப் பின்பற்றினால்தான்,நீங்கள் இதை ஒப்புக் கொள்வீர்களா?

இலங்கையில், விடுதலைப் புலிகள் திராவிட இயக்கப் பாதையை பின்பற்றுகிறார்களே? அது போதாதா?

கே: வன்னியருக்கென்று தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் - என்று வாழப்பாடி கோரியுள்ளது பற்றி ...?

ப: பா.ம.க. தலைவர் ஓட்டு வங்கியை சிதறடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன - என்று பொருள் காண்க.

கே: தன்னுடைய ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று கருணாநிதி கூறியுள்ளது பற்றி ...?

ப: காமராஜைப் பற்றி, அந்தக் காலத்தில் கிண்டலும், கேலியும் செய்து பேசி வழக்கமாகி விட்டது; அதனால் இன்னும் கூட அவ்வப்போது அந்தபழைய வழக்கம் வந்து விடுகிறது.

கே: வீரப்பன் விவகாரம் இப்படி நீண்டு கொண்டே போகிறதே! வரப் போகும் சட்டமன்ற தேர்தலில் அது பிரதிபலிக்குமா...? அப்போது அது யாரைஅதிகம் பாதிக்கும்?

ப: ராஜ்குமார் மீட்கப்பட்டு - அதன் பின் வீரப்பன் மீதும், மற்ற தீவிரவாதிகள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால்,தி.மு.க.விற்கே கூட இது சாதகமாக முடியலாம்.

மாறாக, இந்த விஷயத்தில் தொடர்ந்து அக்கறையின்மை காட்டப்பட்டால், அ.தி.மு.க.விற்குத்தான் சாதகம்.

கே: ஒரு குற்றமும் புரியாத அரசியல்வாதியைக் காண நேர்ந்தால், அவரிடம் என்ன கேட்பீர்கள்...?

ப: வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என் வழக்கமல்ல. ஏற்கனவே, இப்படி ஒரு தவறும் செய்யாமல் இருந்து, பாழாய்ப் போய் விட்டோமேஎன்று அவரே மனம் நொந்து போயிருப்பார். அவரிடம் போய் பலே, பேஷ் என்றெல்லாம் சொல்வதா? பேசாமல் இருந்து விட வேண்டியதுதான்.

கே:எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடும் வல்லமை நாங்கள் தொடங்கும் புதிய கட்சிக்கு உண்டு என்கிறதே எஸ்.டி.எஸ். கோஷ்டி?

ப: அவர்கள் சொல்வதில் என்ன தவறு? சுயேச்சைகள் எல்லா தொகுதிகளிலும் போட்டியிடலாம் - என்பது வாஸ்தவம்தானே!

கே: இன்று ஓர் அரசியல் கட்சி ஆரம்பிக்க, குறைந்த பட்ச தகுதியாக என்னென்ன வேண்டும்?

ப: ஜாதி ஆதரவு.

கே: கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை ஜெயலலிதா அலட்சியப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் அவரிடமே அந்தத்தலைவர்கள் கூட்டணி நாடி போவது - ஏன்?

ப: பா.ஜ.க. மதசார்புக் கட்சி; நாங்கள் மதச்சார்பை எதிர்க்கிறவர்கள். ஆகையால் பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பே கிடையாது என்ற நிலையை எடுத்து, ஜெயலலிதாவை விட்டால், தங்களுக்கு வேறு போக்கிடம் கிடையாது என்று, த.மா.கா. போன்ற கட்சிகள் பறை சாற்றிவிட்டன.

வேறு நாதி இல்லை - என்பதை அவர்களே தெரிவித்துவிட்ட பிறகு, அவர்களை எப்படி நடத்தினால் என்ன - என்ற தைரியம் ஜெயலலிதாவுக்குவந்துவிட்டது.

தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இடம் பெறுவதும் சாத்தியமே என்ற வகையில் இவர்கள் அணுகுமுறை அமைந்திருந்தால் - ஜெயலலிதாஎப்படியாவது இவர்களை தன்னுடன் தக்க வைத்துக்கொள்வதற்காக, இவர்களை நன்றாக நடத்தியிருப்பார்.

கே: லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கும், ஜெயலலிதாவுக்கும் முடிச்சுப் போட்டு வரும் செய்திகளில், உண்மை இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

ப: உண்மை இருக்காது - என்று சொல்கிற துணிவு எனக்கில்லை. இருக்கலாம் என்ற நினைப்பே ஏற்படுகிறது. வழக்கு நடக்கும் போதுதான்பார்க்க வேண்டும்.

கே: சரியான குற்றச்சாட்டுகள் இல்லாமல் ஒருவரை சிறையில் அடைத்து, கொடுமைப்படுத்தி, பின் வழக்கில் நிரபராதி என விடுதலையானால் அவர்போலீஸ் இலாகா மீது மான நஷ்ட வழக்கு போடலாம் அல்லவா...?

ப: ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிந்தே, வேண்டுமென்று உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு - என்று நிரூபிக்க முடியுமானால் மான நஷ்டவழக்கு போடலாம். தவறு நடந்து விட்டது என்று கூறிப் பயன் இல்லை.

கே: கிருபானந்த வாரியாரை ஒரு சமயம் நெய்வேலியிலிருந்து பேச விடாமல், சென்னைக்கு துரத்தியடித்தவர்கள், இன்று மணி மண்டபம் கட்டி, சிலை திறந்து,புகழ் மாலை சூட்டிக் கொண்டாடியது பற்றி ...?

ப: இது வியப்புக்குரியதல்ல, வழக்கமான விஷயம்தான். யாராக இருந்தாலும் சரி - அது காமராஜராகட்டும், எம்.ஜி.ஆராகட்டும்,வாரியாராகட்டும் - செத்து விட்டால், கழகத்திடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.

கே: ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்துடன், பா.ஜ.க.வை பார்க்காதீர்கள்என்று பிரதமர் வாஜ்பாய் பேசியுள்ளாரே?

ப: சிலருக்கு ஒரு வழக்கம் உண்டு. காலையில் எழுந்து குளித்துவிட்டு, நெற்றியில் விபூதியைப் பூசிக் கொண்டு, கொஞ்ச நேரமாவது, மனதாலாவது கடவுளைநினைப்பார்கள்.இதைச் செய்யாவிட்டால், அவர்களுக்கு நிம்மதியே இருக்காது; இது நம்பிக்கை. ரத்தத்தோடு ஊறிப்போன விஷயம்.

ஆனால் வீட்டை விட்டு ஆபிசுக்கு போகும் போது விபூதியை அழித்து விடுவார்கள்; நாலுபேர் பத்தாம் பசலி என்று நினைத்து விடுவார்களோ என்றபயம்தான் காரணம்; திரும்பி வீட்டுக்கு வந்தவுடன்,நெற்றியில் விபூதி ஏறும், வாஜ்பாய் - ஆர்.எஸ்.எஸ். உறவு இப்படிப்பட்டதே.

கே: எனக்கு எந்த ஒரு வெளிநாட்டிலும் நயா பைசா சொத்துக்கூட கிடையாது என்கிறாரே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா?

ப: உண்மைதான், வெளிநாட்டில் நயா பைசா, ரூபாய் கணக்கு கிடையாதே! டாலர், யென், பவுண்ட், மார்க் ... போன்ற கணக்குகள் தானே அங்கெல்லாம்!

கே: துப்புரவு வேலைகளை வெளிநாட்டு ஒத்துழைப்புடன் சென்னையில் நடத்துவதால், மாநகராட்சிக்கு நிறைய லாபம் என மேயர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளாரே! உண்மையா?

ப: லாபாமா இல்லையா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது துப்புரவுப் பணி, நகரின் பல பகுதிகளில், முன்பை விட மிக சீராக நடக்கிறதுஎன்பது மறுக்க முடியாத உண்மை. இது மேயரின் முயற்சியினால் கிடைத்துள்ள பயன்.

கேச பிரதமரின் அமெரிக்க பயணம் இந்தியாவுக்கு நன்மை பயக்குமா?

ப: உடனடி பயன்கள் இல்லாவிட்டாலும், எதிர்கால நன்மைகளுக்கு இது பாதை அமைக்கும்.

கே: அடித்து, உரக்கப் பேசுவதால் எந்தப் பொய்யும் மெய்யாகுமா?

ப: அது கேட்பவர்களைப் பொறுத்தது. வீரப்பன் பணமே கேட்கவில்லை ; பணம் கொடுக்கப்படவும் இல்லை என்று அடித்துக் கூறப்படுகிறது. இதைநம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இந்தப் பொய் மெய்யாகிறது.

கே: இன்றும் கூட தமிழக மக்களின் மத்தியில் உங்களின் நாடகங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறதே! இந்த வெற்றியின் ரகசியம் என்ன?

ப: நான் அந்தக் காலத்து நிலைமைகளைப் பற்றி எழுதினேன். இந்தக் காலம் ஒரு சீர்திருத்தத்தையும் காணவில்லை என்பதால் - அன்று எழுதியது இன்றும்பொருந்துகிறது.

கே: 2001-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதை நீங்கள் விரும்புகிறீர்களா? தனிக்கட்சி ஆட்சி அமைவதை விரும்புகிறீர்களா?

ப: ஒரு கழகத்திற்கு மாற்று, மற்றொரு கழகம்தான் - என்ற நிலை இருப்பதால், சிறிய தீமை எது, பெரிய தீமை எது என்று அவ்வப்போதுபார்த்து, இரண்டில் ஒரு கழகத்தை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது

இந்த நிலையில் முழுமையான மாற்றம் வருவதற்கான வாய்ப்பு இல்லாத இந்நேரத்தில் -கூட்டணி ஆட்சி வந்தால், 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏதோமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற திருப்தியாவது வரும்.

கூட்டணி ஆட்சியில் அரசின் கழகத்தன்மை - கொஞ்சமாவது குறைய வாய்ப்புண்டு. இக் காரணங்களினால், கூட்டணி ஆட்சி வருவது நல்லதுதான்.

கே: கடிவாளம் இல்லாமல் குதிரையை கட்டுப்படுத்த முடியாது என்று கூட்டணி ஆட்சி பற்றி ப. சிதம்பரம் கூறிய கருத்து குறித்து ...?

ப: சரி. குதிரை தானாகக் கூட ஓடும். கடிவாளம் தானாக என்ன செய்யும்?

கே: யூரியா, மாட்டுத் தீவனம்; இலவச வேஷ்டி - சேலை; லண்டன் ஓட்டல்; கிரிக்கெட்; சுடுகாடு ... என்ன ஏதாவது புரிகிறதா?

ப: புரிகிறது பாருக்குள்ளே நல்ல நாடு.

கே: மகாராஷ்டிர அரசு, மக்கள் தொகை பெருக்கத்தைத் தடுக்க புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது பற்றி ...?

ப. நல்லதுதான். இம்மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று பல வருடங்களுக்கு முன்பாகவே நான் கூறியிருக்கிறேன். இரு குழந்தைகளுக்கு மேல் உள்ளகுடும்பங்களுக்குச் சில சலுகைகள் வாபஸ் - என்பதோடு நிறுத்தக் கூடாது; இரு குழந்தைகளுக்குள்ளாக இருக்கிற குடும்பங்களுக்கு சில விசேஷசலுகைகள் அளிக்கப்படுவதும் கூட, பயன் அளிக்கும். இது எங்கள் மத நம்பிக்கையை பாதிக்கிறது - என்று சில முஸ்லிம் அமைப்புகள் கூறுவதைபுறக்கணிக்க வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X