ஆசிரமத்தை சுற்றி பிணங்களை தோண்டி எடுக்கும் பணி தொடக்கம்
மதுரை:
நரபலி ஆசிரமத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதிகள் தோண்டப்பட்டுவருகின்றன. இந்த பிரச்னையில் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையில் நரபலி சாமியாரின் அந்தரங்க அறைகள் சோதனையிடப்பட்டபோது குவியல் குவியலாக "வயாக்ரா செக்ஸ்மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்ட மதுரை அழகாபுரி ஆசிரமத்தில் பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளனவாஎன்பதை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைதான ஆசிரவாசிகள் முன்னிலையில் பிணங்களை தோண்டிஎடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் போர்க் கொடி தூக்கினர்.
இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏராளமான பெண்களும், ஆண்களும் திரண்டுஆசிரமத்தின் முன்பு முற்றுகையிட்டனர்.
பொதுமக்களின் கோரிக்கையை போலீசார் ஏற்க மறுத்தனர். பொதுமக்களும் கலைய மறுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. உயரதிகாரிகள் சமரசத்திற்கு ஓடி வந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு இடையில் பிணங்கள் தோண்டப்படும் பணி துவங்கியுள்ளது.
இதற்கிடையில் சாமியாரின் அறைகளை சோதனையிட போலீசார் நுழைந்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த அறையை அடித்து நொறுக்கினர். போலீசார் பொதுமக்களை விரட்டி அடித்தனர்.பின்னர் சாமியாரின் அறைகள் சோதனையிடப்பட்டபோது, அந்தரங்க அறைகள் முழுவதும் வயாக்ரா மாத்திரைகள் நிரம்பிவழிந்தன. செக்ஸ்க்கு தேவையான எல்லா மருந்து மாத்திரைகள், சாதனங்களும் அங்கே இருந்தன.
அவற்றை கண்டதும் பொதுமக்கள் மேலும் ஆவேசமடைந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications