இலங்கை ஹெலிகாப்டர் விபத்தில் சதி?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

ஹெலிக்காப்டர் விபத்தில் இறந்த இலங்கை அமைச்சர்அஷ்ரபின் சாவு குறித்து சிஐடி விசாரணை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இலங்கை துறைமுகத்துறை அமைச்சர் அஷ்ரப் மற்றும் 14 பேர் சென்ற ஹெலிக்காப்டர்அரநாயகே என்ற கிராமப் பகுதியில் வெடித்து சிதறியது.

இதில் அமைச்சர் அஷ்ரப்பும், மேலும் 14 பேரும் இறந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிக்காப்டர் மலையின் மீதுமோதி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.

மலையில் மோதுவதற்கு முன்பு அது தீப்பிடித்து எரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஐ.ஜி.லக்கி கொடித்துவக்கு கூறியதாவது:

ஹெலிக்காப்டர் விபத்தில் அமைச்சர் அஷ்ரப் இறந்துள்ளார். இது குறித்து சி.ஐ.டி.விசாரணைக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக இரண்டு சிஐடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விபத்து நடந்த இடமான கெகாலேமாவட்டத்திலுள்ள அரநாயகே கிராமத்தில் உள்ள மக்களிடம் முதல்கட்ட விசாரணை நடத்துவார்கள்.

ஏனெனில் அந்த கிராம மக்கள்தான் விபத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் விபத்தில் இறந்தோரது சடலங்களைஎடுக்க உதவியவர்கள் என்றார்.

மேலும் விபத்து நடந்த இடமான அரநாயகே மலைப்பகுதியில் சாட்சியஙகளை யாரும் அழித்து விடாதபடி அங்குபலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

முன்னதாக, போக்குவரத்து அமைச்சர் ஏ.எச்.எம்.பயோசி, இவ்விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவேண்டும் என்று அதிபர் சந்திரிகாவுக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர், அதிபர் சந்திரிகாவுக்கு விடுத்த வேண்டுகோளில், விபத்து நடந்தபின் அந்த இடத்தை நான் நேரில்பார்த்தேன். விபத்தில் இறந்தவர்களது சடலங்கள் துண்டு, துண்டாகச் சிதறிக் கிடந்தன.

இதனால் ஹெலிக்காப்டருக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததனாலும் இவ்விபத்து ஏற்பட்டிருக்கவாய்ப்புக்கள் உள்ளது. இது குறித்து சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்திருந்தார்.

முன்னதாக, இறந்த அமைச்சர் அஷ்ரப்புக்கும், போக்குவரத்து அமைச்சர் பயோசிக்கும் கடந்த மாதம்கருத்துவேறுபாடு ஏற்பட்டது என்பதும், விபத்து நடந்த இடத்தை முதலில் வந்து பார்த்த அரசு அதிகாரி அவரேஎன்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இவ்விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தும்படிவேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொலைப்பட்டியலில்...

மேலும், விபத்தில் இறந்த அமைச்சர் அஷ்ரப் விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில் முதலில் உள்ளார். அவர்தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள தமிழ் முஸ்லீம்களை ஆதரித்தார்.

ஆனால் அவர் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. இதனால் விடுதலைப்புலிகளுக்கு அவர் மேல் ஒரு கண்இருந்தது.

புலிகள் பதுங்கியிருக்கும் காட்டுப்பகுதியில் இச்சம்பவம் நடந்திருப்பதால் புலிகளுக்கும், இச்சம்பவத்திற்கும்இடையே தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், ஹெலிக்காப்டர் விபத்துக்கு முந்தையநாள் தலைநகர் கொழும்பில் உள்ள மருத்துவமனை அருகேபுலிகளின் மனித வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 7 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவி தலைவராகத் தேர்வு:

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மற்றும் துறைமுகத்துறை அமைச்சர் அஷ்ரப் ஹெலிக்காப்டர் விபத்தில்இறந்ததையடுத்து அந்த பதவிக்கு அவரது மனைவி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் மனைவி பெயர் பெரியல் அஷ்ரப். வயது 48. இவர் முதல் பெண் முஸ்லீம் தலைவர் ஆவார்.

அஷ்ரப் இறந்ததையடுத்து முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினர் கூடி விவாதித்த பின் பெரியல் அஷ்ரப் இலங்கைமுஸ்லீம் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் அக்டோபர் 10 ம்தேதி வரை கட்சியின் தலைவராக நீடிப்பார்.

இத்தகவலை கட்சி செய்தித் தொடர்பாளர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+