ராமதாஸ் மீது தாக்குதலே நடக்கவில்லை: திருமாவளவன்
சென்னை:
டாக்டர் ராமதாஸ் மீது எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. சரிந்து வரும் தமது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காகவும், தமக்குள்ளவாக்கு வங்கியை காப்பாற்றவும் திட்டமிட்டு ஒரு பொய்யை பரப்பி வன்றையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் கூறினார்.
உண்மையை கண்டறிய சி.பி.ஐ. விசாரணைக்கு ஏற்பாடு செய்யுமாறும் அவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
டாக்டர் ராமதாஸ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் உண்மை இருந்தால் நான் அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், ராமதாஸ்வழக்கம் போல் பொய் பிரச்சாரம் மூலம், வன்முறை வெறியாட்டம் மூலம் தனது வாக்கு வங்கியை திரட்டும் முயற்சியில் ஈடுபடுவதுபோல் இந்த அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
அவர் மீதோ, அவரது கார் மீதோ எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. இது ஒரு அப்பட்டமான பொய்.
தலித் மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் ராமதாஸ் சம்பாதித்திருக்கிறார். எனவே தேர்தல் நேரத்தில் திமுக, அதிமுக அவரைப்புறக்கணித்து விடும் என்ற அச்சத்தில் இத்தகைய வன்முறையை தூண்டி வதந்திகளை பரப்பி வருகிறார்.
நடக்காத ஒரு சம்பவத்தின் எதிர் விளைவாக இதுவரை 200 குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளன. 6 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இருவர்பலியாகியுள்ளனர்.
ராமதாசின் வன்றையால் நாடே ரணகளமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் உடனடியாக இதைத் தடுக்க வேண்டும். ராமதாஸ்செயலை ஊக்கப்படுத்தும் வகையில் முதல்வர் அறிக்கை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.
சேலம் அதிமுக ஆர்ப்பாட்டம், 23ம் தேதி பெரியார் விழா, 27ம் தேதி தமாகா போராட்டம் ஆகியவற்றை நீர்த்துப் போக செய்ய வேண்டும்என்பதற்காக முதல்வர் இவ்வாறு அறிக்கை விட்டுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்றார் திருமாவளவன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications