வங்கதேசத்தில் மீட்கப்பட்ட சென்னை மீனவர்கள்
சென்னை:
நடுக்கடலில் காணாமல் போன 5 சென்னை மீனவர்கள் வங்கதேசம் அருகில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய் கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை ராயபுரம் மீன்பிடி தளத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்களும், வங்க தேசம்கடல் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
எம்.டி.எஸ். 503 "நோவா என்ற மீன் பிடிப்படகில் சென்னை ராயபுரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது திடீரென்று திசை மாறிகாணாமல் போய் விட்டனர்.
தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெனீபர் சந்திரன் அறிவுரையின்பேரில், காணாமல் போன 5 மீனவர்களையும், படகையும் கடல் மற்றும் வான்வழியாக தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடல்படை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் மீன்வளத் துறையின் பெரிய படகுகளின் மூலம் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோன்று கிழக்கு கடற்கரை பகுதியில்உள்ள ஆந்திரா, வங்காள தேசம் ஆகிய பகுதிகளிலும் காணாமல் போன மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வந்தன.
தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக காணாமல் போன 5 மீனவர்களும் 18ம் தேதி இரவு 9 மணியளவில் கொழும்புசென்று கொண்டிருந்த வணிகக் கப்பலால் வங்க தேச கடல் எல்லைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களை சென்னை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்கள் மாயாண்டி (45), பார்த்திபன் (35), மூர்த்தி (27), மதன் என்ற மணி (22), வடிவேல் (28) ஆகியோர் விரைவில் சென்னைதிரும்புவார்கள் என்று அறிக்கையில் அரசு உறுதியளித்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications