தேவே கெளடா உள்பட 1,000 பேர் மீது வழக்குப்பதிவு
ஊட்டி:
ஊட்டியில் சாலை மறியல் செய்ய முயன்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா உட்பட 1000 பேர் மீது போலீசார்வழக்குப் பதிவு செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் தேயிலைப் பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சியினர் முன்னாள் பிரதமர்தேவகவுடா தலைமையில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இதற்காக தேவகவுடா செப்டம்பர் 16ம் தேதி கோவை வந்தார். 17ம் தேதி ஊட்டிக்குச் சென்று தங்கினார். பின்னர்18ம் தேதி காலை எச்.பி.எப் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார். அங்கு நிலவும் பிரச்னை குறித்துவிவாதித்தார். தொழிற்சாலையை மூடாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தொழிலாளர்களிடம்உறுதியளித்தார்.
பின்னர், தேயிலை விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தில் பெருந்துறைஎம்.எல்.ஏ., பெரியசாமி., திருவட்டாறு எம்.எல்.ஏ., ஹேமாச்சந்திரன் உட்பட பெருமளவில் விவசாயிகள் கலந்துகொணடனர்.
மறியல் போராட்டத்திற்கு முன்னதாக விவசாயிகள் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் ரோடு வழியாக சேரிங் கிராசைஅடைந்தனர். அங்கு தேவகவுடா தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போலீசார் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்று விட்டனர். போலீசார்வழக்குப் பதிவு செய்த போதிலும் யாரையும் துை செய்யவில்லை.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, இரண்டு எம். எல்.ஏ,க்கள் உட்பட ஆயிரம் பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாகக் கூடியிருத்தல், சாலை மறியல் செய்தல், தடையை மீறுதல் ஆகியகுற்றங்களுக்காக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications