ஹாக்கி: இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் டிரா
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் பி பிரிவு ஆட்டத்தில்இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்றஆட்டம் டிராவில் முடிந்தது.
இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டன. இதையடுத்து இரு அணிகளும் தலா 4புள்ளிகள் பெற்றன.
ஆட்டம் தொடங்கிய 35 விநாடியிலேயே இந்தியா முதல் கோல் போட்டு முன்னிலைபெற்றது. ஆடுகளத்தின் மையப் பகுதியிலிருந்து பந்தை கடத்தி வந்த இந்திய வீரர்தன்ராஜ் பிள்ளை கோல் போஸ்ட் அருகே அதை முகேஷ் குமாரிடம் தள்ளினார்.
முகேஷ் குமார் தவறு ஏதும் செய்யாமல் பந்தை கோல் எல்லைக்குள் தள்ளிஇந்தியாவுக்கு முன்னிலை ஏற்படுத்தினார். ஆனால், இந்திய அணியினரின் சந்தோஷம்வெகுநேரம் நீடிக்கவில்லை.
3-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.அதை இந்திய கோல் கீப்பர் மெனசெஸ் வெற்றிகரமாகத் தடுத்தார்.
ஆனால், 4-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பைஆஸ்திரேலிய வீரர் ஜே ஸ்டேஸி பயன்படுத்தி கோல்போட்டு சமன் செய்தார்.
அதன் பிறகு இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இரு அணியினரும்கோல் போட பல வாய்ப்புகளைப் பெற்றனர். ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில்இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதைப் பயன்படுத்தி பல்ஜித் சிங் தில்லான் கோல்போட்டு இந்தியாவுக்கு மீண்டும்முன்னிலை பெற்றுத் தந்தார். முதல் பாதி நேர ஆட்டம் முடிவில் இந்தியா 2-1 என்றகோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா தற்காப்பு ஆட்டத்தைக் கையாண்டது. முகேஷ்குமாருக்கு ஓய்வு தரப்பட்டது. எப்படியாவது 2-வது கோலைப் போட்டுவிடவேண்டும்என்ற ரீதியில் ஆஸ்திரேலியா விளையாடியது.
ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் விக்டரி கோல் போட்டுசமன் செய்தார். அதன் பிறகு இரு அணியினரும் கோல் போட முயன்றனர். ஆனால்,முடியவில்லை.
இறுதியில் இரு அணியும் தலா இரு கோல்கள் போட்டிருந்ததால் ஆட்டம் டிராவில்முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது. இப்போதுஇரு அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன.
இந்தியா அடுத்து வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென் கொரியாவைஎதிர்த்து விளையாட உள்ளது.
இப் பிரிவில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்ற போட்டிகளில் போலந்து 4-1 என்றகோல் கணக்கில் ஸ்பெயின் அணியைத் தோற்கடித்தது. அர்ஜென்டினாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே நடந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில்முடிவடைந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications