சென்னை அருகே கிராம அதிகாரி வெட்டிக்கொலை
சென்னை:
திருநின்றவூர் கிராம நிர்வாக அதிகாரி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் தி.மு.க முப்பெரும் விழாவுக்குச் சென்று விட்டு வீடுதிரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்.
திருநின்றவூர் கொசவன்பாளையம் அம்பேத்கர் தெருவில் வசித்து வந்தவர் சேகர். தி.மு.க வில் முக்கியப் பிரமுகராக இருந்தவர். அவரது மனைவி நாகேஸ்வரி.மகன் கோகுலகிருஷ்ணன்.
சென்னை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க முப்பெரும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட சேகர் கட்சி நண்பர்களுடன் இரண்டு வேன்களில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தார்.
புதுச்சத்திரம் குறுக்குச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவர்கள் வந்த வேன் வந்தது. அப்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல்அவரது வேனை மறித்தது.
பின்னர் உருட்டுக்கட்டைகளால் வேன் கண்ணாடிகளைத் தாக்கிச் சேதப்படுத்தினர். இதையடுத்து வேன்டிரைவர் வேனை பின்னோக்கி ஓட்ட முயன்றார்.அப்போது வேன் அங்கிருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது.
அப்போது அக்கும்பல் வேனுக்குள் இருப்பவர்களைச் சராமரியாகத் தாக்கியது. இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவஇடத்திலேயே இறந்தார். இவர்களுடன் வந்த மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொசவன்பாளையம் ஊராட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க வைச் சேர்ந்தவருமான பாஸ்கரன் ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இக்கொலைதொடர்பாக சேகரின் தம்பியும், ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கவாசகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த முன்விரோதம் காரணமாக பாஸ்கரின் ஆட்கள் இக்கொலையைச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பூந்தமல்லிஒன்றிய அ.தி.மு.க அவைத்தலைவர் பத்மநாபன், முனிரத்னம், வெங்கடாச்சலபதி, மகேஷ், ரமேஷ்பாபு ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கொசவன்பாளையத்தைச் சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தால் கொசவன்பாளையத்தில் பதட்டம் நிலவுகிறது. அப்பகுதி முழுவதும்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications