வேலூரில் எரிந்துபோன கோவில் தேர்கள்
வேலூர்:
வேலூரில் மிகப்பழமையான, புராதனமிக்க பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்ட, ரூ 25 லட்சம் மதிப்புள்ள இரண்டு தேர்கள் திங்கள்கிழமை எரிந்துசாம்பலாயின.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே இருக்கிறது திமிரி. இங்குள்ள பஸ்நிலையம் அருகில், திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 125ஆண்டுகால பழமையான புராதானமிக்க இரண்டு தேர்கள் இருந்தன.
இதில் ஒரு தேர் 40 அடி உயரம், மற்றொன்று 18 அடி உயரம் உடையது. திங்கள்கிழமை நள்ளிரவு தீடீரென்று இந்த இரு தேர்களும் தீப்பிடித்துஎரிந்தன.
எரிந்து சாம்பலான தேர்களின் மதிப்பு சுமார் இருபத்தைந்து லட்சரூபாய் ஆகும். தீப்பிடிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தீயணைப்பு வீரர்கள் அங்கே வந்தும்தேரைக் காப்பாற்ற முடியாதது ஆச்சர்யமாக இருப்பதாகச் சொல்கிறார்கள் வேலூர் மக்கள்.
சம்பவத்தன்று நள்ளிரவு அந்தப்பகுதியில் திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றதாகவும் அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசு வெடித்து, அதிலிருந்து கிளம்பியதீப்பொறிகள் தேரில் பட்டு தீப்பிடித்ததாகச் சொல்கிறார்கள்.
125 ஆண்டுகால பழமையான தேர்கள் பட்டாசுத் தீப்பொறிகளின் மூலம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது என்பது நம்பமுடியாத ஆச்சர்யமாகவேஇருக்கிறது. வேலூர் மாவட்டப்போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications